Home » Posts filed under சாதனையாளர்கள்
Showing posts with label சாதனையாளர்கள். Show all posts
Showing posts with label சாதனையாளர்கள். Show all posts
ஒருமுறை சார்ஜ் செய்தால் 955 கிலோமீற்றர் பயணம் செய்யும் மின்சார பேருந்து....
இன்றைய காலகட்டத்தில் வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பெறுமளவில் மாசுபடுவதை நாம் இயல்பாகவே உணரலாம்.
இருந்தும் இதனை தவிர்க்கும் பொருட்டு பல நாடுகளில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. மேலும் இத்தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் பெறுமளவில் வரவேற்படைந்து வருகின்றது.
ஆனால், இந்த மின்சார வாகனங்களின் பயண தூரம் மிகக்குறைவாகவே அமைந்தது. மேலும் இது பல தொழிநுட்பவியலாளர்களுக்கு சவாலாகவும் காணப்பட்டது.இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது அமெரிக்காவில் புதிய மின்சார பேருந்து ஒன்று அறிமுகம் செய்யபட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த புரொடெர்ரா என்ற நிறுவனம் இந்த பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.
இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 மைல் அதாவது 965 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யுமாம்.மேலும் 42 அடி நீளம் கொண்ட இந்த பேருந்தில் 40 பேர் பயணிக்கும் இருக்கை வசதி அமைந்துள்ளது.
இந்த ஆண்டு புரொடெர்ரா பேருந்துக்கள் கடந்த ஆண்டை விடவிற்பனையில் 220 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் ..!! வரிகள்…
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்…
நான் வணிக உலகில்........
வெற்றியின் உச்சத்தைஅடைந்திருக்கிறேன்.பிறரின் பார்வையில் என்வாழ்க்கை வெற்றிகரமானது.எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள் எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.
பணமும் வசதிகளும் மட்டுமேவாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.
இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பிபார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.
இந்த இருளில் என் உயிரை தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லியசத்தங்கள் மட்டுமே காதுகளில்ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குபோதுமான பணம் சம்பாரித்த
பின், பணத்திற்குசம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும் என்பதுஇப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோஇருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.
அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும்
மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல. கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால்
நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.
நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது.
நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.
அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள்.நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.
உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது. பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம்.
ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.
வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும்
பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழஆரம்பியுங்கள்.
நாம் நடித்து கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு,அன்பை வாரி வழங்குங்கள். உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள்.
அனைவரையும் மனமார நேசியுங்கள்.
மரணப்படுக்கையில் ஸ்டீவ்..!!
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
அம்மாவுக்காக ஒரு கண்டுபிடிப்பு !
‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலை யும் வீட்டு வேலையும் செய்றவங்க. சில சமயம் அம்மாகூட போவேன். அப்போ, அம்மா ஒட்டடை அடிக்கிறதுக்கு படும் கஷ்டத்தைப் பார்த்திருக்கேன். ஸ்கூலில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டியை அறிவிச்சப்போ, ‘ஆட்டோமேட்டிக் ஒட்டடை மெஷின் கண்டுபிடிக்கணும்’னு முடிவு செய்தேன். அதுதான், இந்தப் பரிசை வாங்கிக்கொடுத்திருக்கு” என்று உற்சாகமாகச் சொல்கிறார் யோகேஷ்.
தேனி மாவட்டம், வடுகபட்டி வேளாளர் நடுநிலைப் பள்ளி யில் 8-ம் வகுப்புப் படிக்கிறார் யோகேஷ். ‘நகரும் தானியங்கி ஒட்டடை இயந்திரம்’ கண்டுபிடித்து, மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.
இந்தத் தானியங்கி ஒட்டடை இயந்திரம், நீண்ட பைப்பில் சிறிய மின்மோட்டார் பொருந்தியது. அதை இயக்கியதும் நாடா மூலம் மேல் பகுதியில் இருக்கும் உருளை இயங்குகிறது. அங்கே இருக்கும் பிரஷ், ஒட்டடை அடிக்கிறது. தரையில் நின்ற இடத்திலேயே உயரத்தில் இருக்கும் ஒட்டடையை நீக்கலாம்.
தேனி மாவட்டத்தில், 183 பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெற்றிபெற்று, மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றார் யோகேஷ். ‘‘800 பள்ளிகள் கலந்துகொண்ட மாநில அளவிலான போட்டியில், தங்கப் பதக்கம் கிடைச்சது.
அதன் மூலம் டெல்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சிக்குத் தேர்வானேன். அங்கே பரிசு கிடைக்கவில்லை என்றாலும், ‘தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் இருந்து தலைநகர் வரைக்கும் போய் வந்திருக்கேன். அடுத்த முறை நிச்சயம் பரிசு கிடைக்கும்’னு நிறையப் பேர் பாராட்டினாங்க” என்ற யோகேஷ் குரலில் சந்தோஷமும் வெட்கமும் மின்னியது.
தானியங்கி ஒட்டடை அடிக்கும் இயந்திரம் தவிர, ‘நடக்கும் அதிர்வின் மூலம் கிடைக்கும் மின்சாரம்’ என்கிற கருவியையும் கண்டுபிடித்திருக்கிறார் யோகேஷ். வீட்டுக்குள் வரும் வெப்பதைக் குறைக்கவும் யோசனை சொல்கிறார்.
‘‘நம் பாதம் தரையில் படும்போது ஏற்படும் அழுத்தத்தைக்கொண்டு, ‘பீசோ எலெக்ட்ரிக்’ என்ற விளைவின் மூலம் மின்சாரம் கிடைக்கச் செய்யலாம். வேங்கை மரம், நாட்டுக் கருவேல மரம், முருங்கை மரம் ஆகியவற்றின் பிசின், மரவள்ளிக்கிழங்கு மாவு கலந்து, வீட்டின் மேல் பகுதியில் இடும்போது, புறஊதாக்கதிர்களைத் தடுத்து, சூரிய ஒளியினால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கலாம்” என்கிறார், இந்த வில்லேஜ் விஞ்ஞானி.
மட்டக்களப்பில் 52 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்
52 வருடங்களுக்குப் பின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நேற்று சிறுவர் தினத்தை முன்னிட்டு அப்பாடசாலைக்கு சென்று அதிபர், ஆசிரியர்கள், மாணவனையும் பாராட்டியதுடன் உதவிகளையும் வழங்கினார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் 162 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவன் பு.மிருசனனுக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார்.
இப்பாடசாலையானது 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக பு.மிருசனன் 162 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் வி.ஸ்ரீவாலராஜ் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஏனைய மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு மிட்டாய் வழங்கி வைத்தார்.
இங்கு சித்தி பெற்ற மாணவனின் பெற்றோர்களும் மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வின் போது அதிபர் வி.ஸ்ரீவாலராஜ், கற்பித்த ஆசிரியரான திருமதி.பி.ராஜரெட்ணம், ஓய்வுபெற்ற மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கை தமிழ் மாணவன்
இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று பெருமை சேர்த்த குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று 150,000 பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது.
இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன .
ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர் . முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக எம்
தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது.
உயர்தர பரீட்சை விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று மட்டு. புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை!
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./ புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான குழந்தைவடிவேல் சரண் என்ற மாணவனே மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவபீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் எட்டு ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்றிருந்ததுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் பத்தாவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
இவர் வர்த்தகர் குழந்தைவடிவேல்- சுபா தம்பதியரின் புதல்வராவார்.
இவருக்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
11 வயதில் தமிழ் மாணவி – உலகின் இளவயது பட்டதாரி
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய கணினிச் சமூகத்தின் தகவல் தொழில்நுட்ப பட்டத்தை (BCS IT)பெற்றுள்ளார்.
இவரே உலகில் தகவல் தொழில்நுட்பத்தில் ஆகக்குறைந்த வயதில் பட்டம் பெற்றவராவார்.
இவர் எட்டு வயதில் இருக்கும் போதே, இவர் கபொத சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் ஏ தரச் சித்தியைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.
அத்துடன், எட்டு வயதிலேயே கணினி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட இவர், உலகின் இளம்வயது இணையத்தள மேம்பாட்டாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்..
இவர் வர்த்தகரான பிறேமானந்தா நடராஜா மற்றும் லக்சிதா பிறேமானந்தா ஆகியோரின் மகளாவார்.
தோசை, றொட்டி, கொத்து றொட்டி இயந்திரத்தை தயாரித்து சாதித்த யாழ். மானிப்பாய் இந்து மாணவன் (Photos)
வருடாந்தம் இலங்கை புத்தாக்க ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியில் களனிப் பல்கழைக்கழகத்தில் இருநாட்கள் நடாத்தப்பட்ட புத்தாக்குநர் போட்டியில் யாழ். மானிப்பாய் இந்து கல்லுரி மாணவன் ஜெயச்சந்திரன் திருசன் அவர்கள் சிறப்புச் சித்தியில் வெற்றி பெற்றுள்ளார்.
இலகுவான முறையில் தோசை, றொட்டி, கொத்து றொட்டி மற்றும் பலதரப்பட்ட உணவுவகைகளை இவரின் இயந்திரம் மூலம் தயாரிக்கலாம்.
விவசாயிக்கு பத்மஸ்ரீ பட்டம்!
புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.
சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது.
இப்படிப்பட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதைப் பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை.
ஊடகங்கள் ஒரு சிலவற்றைத் தவிர, இந்தச் செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலைப் படுத்துபவர்கள், விவசாயியை மதிக்கத் தவறிவிட்டனர்.
பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவைப் புது தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்தியது. அது குறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை.
‘பசுமை விகடன்' மூலம் தில்லித் தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்தத் தகவலைக் கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்துப் பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாகப் பாராட்டியும் உள்ளார்கள்.
இதுவே ஒரு சினிமா நட்சத்திரமாக இருந்தால் எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயரக் கட்டவுட்டுகள் , வாணவேடிக்கைகள் , மேளதாளங்கள் என ஊரையே அமர்க்களப் படுத்தி இருப்பார்கள்
அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருதை பெற்றவர் தீபிகா எனும் இந்திய சிறுமி
கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார்.
14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது.
தீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா? கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே…. இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்பிய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார்.
சூரிய சக்தியினைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கலன் உருவாக்குவதே அவரின் இலட்சியமாய் இருந்தது. தனது ஆசிரியர்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்.
அதில் அவர் வெற்றியும் கண்டார். நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டஙகளில் கடைசியாக கணிதம் மற்றும் அறிவியல்வகை சார்ந்த ஒன்பது மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் முதல் பரிசினைப் பெற்றது தீபிகாவின் கண்டுபிடிப்பு.
25,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையுடன் முதலிடமும், அதிபரின் பாராட்டும் கிடைத்தது வெறும் கண்டுபிடிப்புக்கு மட்டுமல்ல; ”இந்தியா மற்றும் இதுபோன்ற இன்னும் சில நாடுகளில் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்கும் குழந்தைகளின் நலன் காக்கவே எனது கண்டுபிடிப்பான சூரிய மின்சக்தியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்புக் குவளை பயன்படும்” என்று சொன்ன மனிதமும் தான்.
சிங்கப்பூரில் சமூக போராளி விருது வாங்கிய தமிழர்
சிங்கப்பூரில் அறப்பணிகள் செய்யும் தமிழருக்கு அந்நாட்டின் சார்பில் சமூக போராளி விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் பிறந்தவர்.
50 ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்ற ஜலீல், கார் துடைப்பது போன்ற வேலைகளை செய்து படிப்படியாக உயர்ந்து கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்திவரும் ஜலீல் ஏழைகளுக்கு கல்வி தொகை உள்ளிட்டவற்றை வழங்கி சேவை செய்து வருகிறார்.
இந்தியாவை சேர்ந்த நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் ஜலீலின் சேவையை பாராட்டி சிங்கப்பூர் அரசு “சமூக போராளி விருது” வழங்கியுள்ளது.
இந்த விருதுடன், 6 லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் 9 வயது ஈழத்துச் சிறுவன் கணிதப் போட்டியில் சாதனை
ஈழத்துச் சிறுவனான அபிநாவ் சந்திரமோன் (9 வயது) லண்டனில் இடம்பெற்ற கணிதப் போட்டியில் “ஏ” தரத்தில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த அபிநாவின் குடும்பம் ஜேர்மனியில் இருந்து 2006ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்றுள்ளனர்.
லண்டன் லூடொன் மாநிலத்தில் வசிக்கும் அபிநாவ், தனது 7வயதில் GCSE பாடத்தில் உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து அபிநாவின் அம்மா வாணி சந்திரமோகன் கருத்து வெளியிடுகையில், நான் நிலவில் இருப்பது போல் உள்ளது. மகன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான் எனக்கு கணிதப் பரீட்சையில் “ஏ” தரம் கிடைக்குமென்று.
மிகவும் நம்பிக்கையாக இருந்தான். விளையாட்டைப் போலவே இந்தப் பரீட்சையையும் விரும்பினான். உண்மையில் பரீட்சையை அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது மகன் கணிதத்தை நேசிக்கின்றார். குறித்த பரீட்சைத் தாள் ஒரு மணித்தியாலத்தைக் கொண்டது. ஆனால் 45 நிமிடத்தில் எழுதி முடித்துவிட்டதாக தெரிவித்தார்.
கணனி விளையாட்டைப் போல் இப்பரீட்சை இருந்ததாகக் மகன் குறிப்பிட்டார். நாங்கள் அவரிடம் எதனையும் திணிக்கவில்லை. அவர் எங்களுக்கு கிடைத்தது ஒரு பரிசாகவே கருதுகிறேன். ஏனெனில் முதலாம் வகுப்பில் படிக்கும் போதே அவரது ஆசிரியர், இவர் மிகவும் திறமையானவர் என்று தெரிவித்திருந்தார். விரைவில் புரிந்து கொள்ளக் கூடிய திறமை உண்டு எனக் குறிப்பிட்டார்.

கல்விப் போராளி மேரியம்மா !!
மொழியால்,இனத்தால்,சாதியால்,பாலினத்தால் சர்வதேசமெங்கும் தங்கள் பலம், பலவீனதிற்க்கேற்ப்ப இந்த பிரிவினைகள் மனிதர்களை,வலிமை குன்றியவர்களை ஒடுக்கியே வருகிறது....ஒவ்வொரு பேதங்களும் ஒவ்வொரு வகையில் வலி தந்தாலும், பட்டென பார்வையில் படுவதால் நிறபேதம் ஒடுக்குமுறையில் உச்சத்தை தொட்டே வந்துள்ளன.
19 நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில், அமெரிக்க நாட்டில் நிறபேதம் தலைவிரித்தாடிய ஒன்று....
எந்த வழியிலும் ஏற்றம் பெற முடியா ஒரு அடிமை நிலையிலேயே கறுப்பின மக்கள் வாழ்ந்து வர அடிமை சங்கிலிகளை உடைத்தெறிய மால்கம் எக்ஸ்,மார்டின் லூதர் கிங் என தலைவர்கள் போராடித்தான் வந்தனர்.அதில் கல்வி தளத்தில் , 'கருப்பு' பக்கங்களாகவே மாற்றப்பட்டு இருந்த கருப்பு மனிதர்களின் வாழ்வில் , மாற்றமெனும் புரட்சி முழக்கங்களை எழுத தொடங்கினார் ஓர் புரட்சி பெண்மணி.....
அவர் 'மேரி மெக்லியோட் பெத்யூன்'
அமெரிக்காவில் தென் பகுதியில் வாழும் கருப்பின மக்கள் அனைவரும் சுதந்திர மக்கள் என வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்த அந்த காலகட்டத்தில் தான் மேரியின் சிறு வயது பிரயாணம் தொடங்கியது...அதன் பின் அவரின் 79 ஆண்டுகளின் செயல்பாடுகளை கிட்டத்தட்ட 94 பக்கங்களில் சுருக்கமாக ஆனால் ஆழமாக வாசகர்களின் மனதில் பரவி பதிய செய்கிறது அவரைபற்றிய நூலான "உனக்குப் படிக்கத் தெரியாது" .
சிறு வயதில் ஒரு வெள்ளைக்கார மாளிகைக்கு புறவாசல் வழியாக செல்ல, அங்கே இருந்த வெள்ளைகார சிறுமி விளையாட கூப்பிடுகிறார்..தன் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் உளவியல் ஒடுக்குமுறையை சந்திப்போம் என அறியாமல் தான் விளையாட செல்கிறார் மேரி. அப்பொழுது அங்கே இருந்த ஒரு அழகிய புத்தகத்தை கையில் எடுத்து புரட்ட "புத்தகத்தை என்னிடம் கொடு!இதை நீ எடுக்க கூடாது!நீயெல்லாம் படிக்க கூடாது!" என பிடுங்குகிறார் வெள்ளைகார சிறுமி. இந்த ஒற்றை வாக்கியம் தான் மேரியின் வாழ்க்கையையே மாற்றி போட்டது.
"'நீயெல்லாம்' 'நீ' என்கிறாளே அப்படியென்றால் கருப்பினத்தினர் படிக்க கூடாதா?-கேள்விகள் துளைத்து கொண்டே இருக்க கல்வி ஒன்றே தான் நம் மக்களை மேம்படுத்தும் எனவே கல்வியால் வளர்வோம் கல்வியால் வளர்த்துவோம்" என்ற மேரியின் அன்றைய சூளுரை தான் பிற்பாடு அவரை மிக பெரிய கல்வி நிலையங்களை உருவாக்க வைத்தது.
தொடக்கத்தில் அவர் கட்டிய பள்ளி ஒரு குப்பை தொட்டியில் இருந்துதான் உருவானது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.ப்ளோரிடா மாகணத்தில் ஒரு ஆசிரியராக பணி புரிந்து வந்த மேரி ஒதுக்கப்பட்ட கருப்பின மக்கள் பயில ஒரு பள்ளியை உருவாக்கும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை கிடைக்கும் வருவாயில் சிறு தொகையை சேர்த்து வந்தவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை...ஒதுக்குபுறமாய் குப்பைகளை கொட்டி வைக்கும் ஒரு இடம் மட்டுமே கிடைத்தது .ஆனால் அதை வாங்கவும் கூட போதிய பணம் இல்லை.பூனையை வாங்கும் பணத்தில் யானையை வாங்க துடிக்கும் மனசு....விடவில்லை மேரியம்மா.அங்கே ரயில் பாதையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து தந்து கிடைத்த சிறு தொகையை சேர்த்தும்,பின் ஆங்காங்க உதவி கேட்டுமே அந்த பள்ளியை நிறுவினார். குப்பை கூடம் கல்வி கூடமாக மாறியது.குப்பையாய் ஒதுக்கப்பட்ட கருப்பு மக்கள் மாணிக்கங்களாய் மிளிர தொடங்கினர்..கருப்பின மக்கள் படிக்க கூடாது,படித்தால் உயர்ந்த நிலைக்கு வந்து தங்களுக்கு நிகர் ஆகிவிடுவார்கள் என வெள்ளை வெறி அவர்களை ஒடுக்க,கல்வியின் வழியேயே வெள்ளை வெறியை வீழ்த்த தொடங்கியது மேரியின் பள்ளி.
பள்ளியை உருவாக்கி பின் 1907 சிலர் உதவியுடன் ஒரு புதிய கட்டிடமும் கட்டியாகிவிட்டது. 250 மாணவ செல்வங்களும் சேர்ந்துவிட, மகிழ்ச்சி என்றாலும் அவர்களுக்கு உணவு உடை வழங்க வேண்டும் என்ற நெருக்கடி கண் முன் நிற்க அதை சரிகட்டவே வயல் வெளியில் பல்வேறு விதமான காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டன. சிறுபகுதி விற்பனைக்கும் மற்றவை மாணவ செல்வங்களுக்கும் உணவானது.
'என் கருப்பினம் கல்வியில் மேலே வர வேண்டும் மேலே வர வேண்டும்' இதை மட்டுமே தாரக மந்திரமாய் உச்சரிக்க உச்சரிக்க நெருக்கடிகள் கறுப்பின மக்களின் வியர்வைகள் பட்டே தூள் தூளாயின.பள்ளி கட்டிடமாகி உயரவும் தொடங்கின.கல்வியில் மட்டுமல்ல சுகாதாரத்திலும் கூட கருப்பின மக்கள் துன்பப்பட்டனர், ஒரு முறை ஒரு மருத்துவமனையில் கருப்பினத்தவர் என்பதாலேயே சாக கிடந்த ஒரு நோயாளியை சேர்க்கவில்லை. மேரியம்மா சென்று அவரை போராடி சேர்த்து வர,பின் ஓரிரு நாட்களில் திரும்பி சென்று அங்கே பார்த்தால் மாட்டு கொட்டைகையை விட மோசமான ஒரு இடத்தில அந்த நோயாளி கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார் காரணம் கருப்பு நோயாளி தங்களுடன் இருப்பதை வெள்ளை நோயாளிகள் விரும்பவில்லையாம். நோயில் கூட நிற பேதமா? நோய் உடலில் இல்லை வெறிபிடித்த வெள்ளை உள்ளங்களில் இருந்தது நிற வெறி எனும் சீழ் பிடித்து....
ஆழ பாதிக்க, மேரியம்மா தனது அயராத உழைப்பை செலுத்தி ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். கல்வி நிலையத்தில் கருப்பின மக்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்த மேரியம்மா தன் மருத்துவமனையில் வெள்ளை இனத்தவரும் வந்து சிகிச்சை பெறலாம் என்றார்.இதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே உண்டான மனிதநேயம்...
அவர் தூங்குவது நாள் ஒன்றுக்கு நாலு மணி நேரம் தான்.அயராது உழைத்தார் தம் இனத்தின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்தார்.
'கற்று கொள்வதற்காக உள்ளே வருக!
சேவை செய்வதற்காக வெளியே செல்க' - மேரியின் கல்வி நிலையத்தில் , உள்ளே-வெளியே என்ற இரண்டு வாசல்களிலும் எழுதப்பட்ட வாசகம்.
கற்றுக்கொண்டும் , சேவை செய்துகொண்டும் இருந்த மேரியம்மா ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்தப்பட்ட போதும் கூட " எனது மருத்துவர்கள் நான் ஓய்வெடுக்க வேண்டும் என்கின்றனர் ஆனால் கறுப்பின பெண்களும்,பைய்யன்களும் முழுமையான கல்வியை பெரும் வரை தங்களுடைய பெறுமானத்தை தகுதியை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பு தேவை என்று இருக்கும்வரையில் நான் ஒருபோதும் ஓய்வெடுக்க முடியாது " என சேவையை தொடர திரும்பிய மேரியம்மாவிற்கு 1955 ஆம் ஆண்டு 18 ஆம் நாள் நிரந்தர ஓய்வை திணித்தது இயற்கை.

15 நிமிடத்தில் மடிக்கணணியை கழற்றி மாற்றி சாதனை படைத்த 8 வயது சிறுமி
கோவை மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி(8) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறாள்.

கணவரை இழந்த நிலையிலும் ஆசிய அளவில் பிசினசில் சாதனை படைத்த 50 பெண்களில் ஒருவரான ரேணுகா
கணவரை இழந்த நிலையிலும் ஆசிய அளவில் பிசினசில் சாதனை படைத்த 50 பெண்களில் ஒருவரான ரேணுகா தன்னைப் பற்றி கூறுகிறார் கேளுங்கள்:“நான், மும்பையில் வசிக்கும், தமிழ் பெண். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். குடும்பமா, வேலையா என்ற கேள்வி ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும் பெண்களுக்கு பல சூழ்நிலைகளில் சிக்கலும் குழப்பமும் நிறைந்ததாக இருக்கும்.
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்

.jpg)

.png)
+-+Copy.png)