Home » Posts filed under தொழில்நுட்பம்
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

மிகவும் தனிமையான கோள்
விண்வெளியில் வெறுமையான பிராந்தியமொன்றில் காணப்பட்ட இளம் கோள் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2 மாஸ் ஜே 1119 – 1137 என அழைக்கப்படும் இந்தக் கோள் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூமியிலிருந்து சுமார் 95 ஒளியாண்டுகள் தொலைவில் காணப்பட்ட அந்தக் கோள் எமது வியாழக்கிரகத்தை விடவும் 8 மடங்கு திணிவைக் கொண்டதாகும்.
கோள்கள் நட்சத்திரமொன்றை சுற்றி வருவதே வழமையாகவுள்ள நிலையில் இந்தக் கோள் தனக்கென நட்சத்திரமொன்றையும் கொண்டிராது தனித்துக் காணப்படுகின்றமை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொய் சொல்வோரை கண்டுபிடிக்கும் கணனி
தலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு.ஆனால், இவ்வாறு போலியாக நடிப்பவர்களை கண்டுபிடிக்கும் புதிய கணனி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் நிஜ வலியால் துடிக்கிறாரா? அல்லது போலி வலியால் நடிக்கிறாரா? என்பதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும் நவீன கணனியை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள சாண்டியாகோ நரம்பியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்காக வலியால் அவதிப்படும் 25 பேரின் ஒரு ஜோடி வீடியோ காட்சிகளை ஆராய்ச்சியாளர்கள் 170 பேரிடம் போட்டுக் காண்பித்தனர். இவற்றில் எது நிஜ வலி? எது போலி வலி? என்று அடையாளப்படுத்தும்படி, அவர்களிடம் கேட்கப்பட்ட போது, சுமார் 50 சதவீத நடிப்பை மட்டுமே இவர்களால் இனம்காண முடிந்தது.
ஆனால், இதே காட்சிகளை கவனித்த இந்த நவீன கணனியோ 85 சதவீதம் துல்லியமான முடிவை வெளியிட்டு மனிதர்களை அசத்தியுள்ளது.
நிஜ வலி ஏற்படும் போது மனிதர்களின் வாய் உள்ளிட்ட முகத்தின் தசைப் பகுதிகளில் உண்டாகும் 20 வகை மாற்றங்களை அடிப்படையாக வைத்து இந்த சரியான முடிவுகளை கணனி கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதிய விண்கலம்
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் அதிக எடையைத் தாங்கிச் செல்லும் புதிய விண்கலம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ளது. சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வேலைகளைத் தொடங்கியுள்ளது நாசா. மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் அதிக எடை தாங்கும் வகையில் இந்தப் புதிய விண்கலம் தயார் செய்யப் பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த விண்கலம் 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இதன் முதல் சோதனை ஓட்டத்தில், இது விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை தாங்கிச்செல்லும் என நம்பப்படுகிறது. புதிய விண்கலம் மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது. தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
கைப்பேசி மூலம் சமையல் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்
கைப்பேசிகளில் உள்ள மின்கலங்களில் இருந்து பிறப்பிக்கப்படும் மின் சக்தியைப் பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
PowerPot X எனும் இச்சாதனமானது David Toledo என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 10 Watts மின்சக்தியில் இயங்கக்கூடியதாக காணப்படுகின்றது.
இதேவேளை ஐபேட் ஒன்று, PowerPot X சார்ஜரின் மூலம் 2 ஸ்மார்ட் கைப்பேசிகள், மற்றும் 4 GoPro கமெராக்கள் ஆகியவற்றினையும் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோர்வாக இருக்கும் வாகன ஓட்டுனர்களை எச்சரிக்கும் கருவி - இந்திய தமிழ் மாணவர்கள் சாதனை
பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது.
இத்தகைய செயல்பாடுகள் மூலம் காரின் சொந்தக்காரரை எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்து, ஜிபிஎஸ் மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது. அசதி அளவை கணிக்க வேறு புற காரணிகளான வண்டியின் நிலை, வானிலை, தகவல்களை கணிக்கலாம்.
எதிர்காலத்தில் நபருக்கு நபர் உடல்நலக்குறைவு மற்றும் சிக்னல் வேறுபாடுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், இயக்குனர் பா. வெங்கடேஷ்ராஜா, முதல்வர் சுயம்பழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
ஹேக்கர்களிடமிருந்து உங்கள் பேஸ்புக் கணக்கினை பாதுகாப்பது எப்படி?
இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான்.
சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.
இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.
பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.
பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.
யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.
எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.
அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?
பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.
பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.
அப்ளிகேஷன்களுக்குத் தடா:
பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.
அணுகுவதற்குத் தடை:
உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.
இறுதி நடவடிக்கை:
பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.
மின்னல் மூலம் செல்போனுக்கு சார்ஜ்
மின்னலில் உள்ள சக்தியின் மூலமாக செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனிலுள்ள செüத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர் கூறியதாவது,
நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம்.
முதலாவது மின்மாற்றியின் மூலமாக மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்தி, அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம்.
இதன் மூலமாக இயற்கை சக்திகளை மனித பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக பால்மர் தெரிவித்தார்.
கணனியில் செய்யப்பட்ட மிகப் பெரிய தவறு! பில்கேட்ஸ் விளக்கம் (வீடியோ இணைப்பு)
கணனி வளர்ச்சிக்கு பங்காற்றிய ஜாம்பவான்களில் பில்ஹேட்ஸும் ஒருவர்.
இவர் உருவாக்கிய விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete எனும் கட்டளை மூலம் லொகின் செய்வதற்கு அல்லது Task Manager இனை பெறும் வசதி தரப்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறு தரப்பட்டுள்ளமை தவறு என்று தற்போது விளக்கமளித்துள்ளார்.
பில்ஹேட்ஸ்.
இதற்கு காரணம் இந்த மூன்று விசைச்சாவிகளையும் ஒரே கையினால் பயன்படுத்த முடியாமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.
மனிதில் புதைந்துள்ள விடயங்களை வெளிப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்!
Wristband எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு செயற்பாடுகளை செய்ய முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப்பட்டிருந்தது.
இவை உயிர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிந்திய கண்டுபிடிப்பாக இருந்தன.
இந்நிலையில் தற்போது Headbands எனும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் மனிதனின் மனதில் உள்ளவற்றினை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடாவை சேர்ந்த InteraXon எனும் நிறுவனத்தினால் இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Hard Disk என்றால் என்ன? அடிப்படை விளக்கங்கள்
(ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம்.
இதனை முறை யாகவும் கவனமாகவும் கையாள வேண்டும்.
இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள்.
ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.
மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு
உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே? நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன ஷிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார். அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.
சிந்தனைக்கு மரத்துண்டுகளால் உயிர்கொடுத்த ஷிவ்ராக் 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைச் சைக்கிளில் திசைமாற்றியோ (Steering), மிதிஇயக்கியோ (Pedals), தடையோ (Break) கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வுதான் சைக்கிள் உருவாவதற்கு காரணமாக இருந்தது
கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு சைக்கிளை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுபவர் சீட்டில் உட்கார்ந்துகொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட சைக்கிள் இதுதான்.
அன்றைய காலங்களில் முழுக்க முழுக்க மரதுண்டுகளால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சைக்கிளை உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்க முயற்ச்சித்தவர் லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் ஆவர். கார்ல் வோன் ட்ரைஸின் சைக்கிள் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட இந்த சைக்கிளின் நேர்த்தியான தோற்றம் மற்றும் இலகுவாக உருளக்கூடிய சக்கரம் ஆகியவை சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பைபெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.
உலகில் முதன் முதலில் பெடலை (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவரையே சாரும் ஆகையால்தான் இன்று சைக்கிளை கண்டரிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக (Blacksmith) வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி (Steering), தடை (brake) மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.
இந்த சைக்கிளில் பின்புறச்சக்கரம் (Wheel) முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி (steering), தடை (brake), மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. இதில் இணைக்கப்பட்டிருந்த பெடலை பற்றி குறிப்பிடுவதென்றால் நாம் எல்லோரும் தையல்மிஷினை பார்த்திருப்போம்தானே. அதில் தையல்மிஷினை காலால் மிதித்து இயக்குவதற்கு அமைக்கப்பட்டிக்கும் பெடலையும் பார்த்திருப்போம்தானே. அதே செயல்பாட்டு முறையை கொண்ட பெடலைத்தான் மேக்மில்லன் தனது சைக்கிளிளும் அமைத்திருந்தார். பெடலை கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு சைக்கிள் இயங்கியது.
தையல்மிசினுக்கு வேண்டுமானால் அந்தவகை பெடல் பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் சைக்கிளுக்கு அது பொருத்தமானதாக இல்லை அதனைதொடர்ந்து மேம்பட்ட பெடலை தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் மும்முறமாக இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் (Crank) மற்றும் பால் பியரிங்க்ஸ் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த பெடலை சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு சைக்கிள் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
பின்புறசக்கரம் சிறிதாகவும் முன்புறசக்கரம் பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை கண்டு 1868-ஆம் ஆண்டு சைக்கிள் தயாரிப்பதற்க்கென்றே ஒரு நிறுவனம் ஒன்றை துவக்கினார். மிசாக்ஸ் கம்பெனி (Michaux Company) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த கம்பெனிதான் உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் சைக்கிள் தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட உலகின் முதல் சைக்கிள் கம்பெனி ஆகும்.
சைக்கிளின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சைக்கிளின் சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து சைக்கிளின் சக்கரத்தையும் (Wheel) உலோகத்தில் தயாரிக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டார். முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டனர். அந்த பாகங்கள்தான் சக்கரத்தின் ரிம் (Rim) மற்றும் ஸ்போக்ஸ் (Spokes) கம்பிகள். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.
இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய சைக்கிள் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த சைக்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சைக்கிளைத்தான் முதன் முதலாக பெண்களும் பயன்படுத்ததொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களை கொண்ட சைக்கிள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் வடிவமைத்த சைக்கிளை தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த சைக்கிள்கள் அனைத்தும் முன்புறசக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்கும் வகையில்தான் சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருந்து.
பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி சைக்கிளை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது. இதைதொடர்ந்து இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் ஹென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய சைக்கிள் ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.
இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது சைக்கிளில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த பெடல் இயக்குசங்கிலி மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பெடலை மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது. அவர் வடிவமைத்த இந்த வகைச் சைக்கிளைத்தான் இன்று நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.
1888-ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் ஹெர்குலிஸ் என்ற சைக்கிள் கம்பெனியை துவங்கினார். ஹெர்குலிஸ் சைக்கிள் கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது.

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்
டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது.
தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.
இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக காரில் கமெராக்கள், ரேடார்கள் மற்றும் கணனி தொழில்நுட்பங்களை கூகுளே வழங்கவுள்ளது.
இந்த கார்கள் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும். இதற்கான பணிகள் முடிவடைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை பார்க்க உதவும் தொலைநோக்கி
13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் பால்வெளிகள் உருவாகுவதை பார்க்க்கூடிய 30 மீற்றர் விட்டமுடைய தொலைநோக்கி ஒன்றினை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் 2014ம் ஆண்டு தொடங்க இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
2020ம் ஆண்டிற்கிடையில் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த தொலைநோக்கி இதுவரை காலமும் தொலைநோக்கிகளில் மிகப்பெரியதாக இருக்கும். இப்போதுள்ள தொலைநோக்கிகளைவிட மூன்று மடங்கு துல்லியமான படங்களை இது உருவாக்கும் என எதிர்பார்ககப்படுகின்றது.
சித்திரை 2014 இல் அனைத்து பூர்வாங்க வேலைகளும் முடிக்கப்பட்டு, தொலைநோக்கியின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தொலைநோக்கியின் ஆரம்ப கட்ட பணி, பால்வெளிகளில் நட்சத்திரங்களின் உருவாக்கங்கள் எவ்வாறு நிகழ்கின்றது என்பதனை ஆராய்வதாக இருக்கும்.
ஆரம்பத்தில் 98மீற்றர் நீளமுள்ளதாக அமைக்கப்படவுள்ள தொலைநோக்கி, 2022 இல் 138மீற்றர் நீளமுள்ளதாக மாற்றியமைக்கபடும். இதன் கட்டுமாப் பணிகளுக்கு ஏறத்தாள 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை! இருந்த இடத்திலே சார்ஜ் செய்யலாம்
இனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை, இருந்த இடத்திலிருந்து கைபேசிகளுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.
நம்மை சுற்றி எந்நேரமும் அலைவரிசைகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
எங்கோ ஒலிபரப்பாகும் ரேடியோவை கேட்க முடிகிறது, அதேபோல எங்கோ ஒளிபரப்பாகும் TV ஐயும் எம்மால் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமா Wifi-யின் மூலம் மடிக்கணனியில் இணையத்தை பயன்படுத்தலாம்.
இவ்வாறு பல அலைவரிசைகள் எம்மைச் சுற்றி எப்பவுமே காணப்படுகிறது, காரணம் இதில் எலக்ட்ரான்கள் உள்ளது.
இதனைப் பாவித்து பற்றரிகளை சார்ஜ் செய்யும் சிப் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதனை கைபேசியில் புகுத்தினால், நாம் அவசரத்துக்கு சார்ஜ் செய்ய அலையவேண்டியது இல்லை.
பற்றரி வீக் ஆனால், ஒரு பட்டனை அழுத்தினால் போதும். சார்ஜருடன் இணைத்தது போல அது சார்ஜ் செய்ய ஆரம்பித்துவிடும்.
அதிக மின்சாரத்தை அது உற்பத்திசெய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவசரத்துக்கு உதவும் வகையில் அது மின்சாரத்தை தயாரித்து பற்றரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
அதிலும் நாம் நல்ல சிக்கனல் கிடைக்கும் இடங்களில் இருந்தால், அங்குள்ள Routers, TV சிக்னல்கள் மற்றும் ரேடியோ சிக்னல்களின் கதிர்களை அது பாவித்து மின்சாரத்தை உற்பத்திசெய்துவிடும்.
இதுபோன்ற சாதனங்கள் விரைவில் சந்தையில் வர உள்ளது, இது மிகவும் அதிசயமான கண்டுபிடிப்பு தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நீர் மற்றும் ஏனைய திரவங்களிலிருந்து ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்க
பொதுவாக இலத்திரனியல் சாதனங்கள் நீர் போன்ற திரவங்களினால் செயலிழக்கும் சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றது.
அதேபோன்று விலை உயர்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
எனவே ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்கும் வகையில் Liquipel எனும் உறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நனோ படையினால் உருவாக்கப்பட்ட இந்த உறையானது நான்கு படையினைக் கொண்டதாகவும் அதிர்வை உறுஞ்சக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு
பல மில்லியன் கணக்கான பயனர்களுடன் தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக் துரித கதியில் பல்வேறு புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் News Feed எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பேஸ்புக் பக்கத்தின் புதிய வடிவமைப் தரக்கூடிய இவ்வசதியினை கூகுள் குரோம் உலாவிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கென பிரத்தியேக நீட்சி ஒன்று காணப்படுகின்றது. அந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் News Feed வசதி கிடைத்துவிடும்.
தரவிறக்கம் செய்ய

வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..
கணனி உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்களை நீக்குவதற்கு பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்கள் அறிமுகமாகிய வண்ணம் இருக்கின்றன.இவற்றில் சில இலவசமாக கிடைப்பதுடன், சில பணத்திற்கும் கொள்ளவனவு செய்ய வேண்டி இருக்கும்.
வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு தருவதற்கு தற்போது NANO AntiVirus எனும் புதிய மென்பொருளானது முற்றிலும் இலவமாக கிடைப்பதுடன் உயர் வினைத்திறன் உடையதாகவும் காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இந்த மென்பொருளானது எந்தவிதமான வைரஸ்களிலிருந்தும் கணனியை பாதுகாப்பதுடன் உடனுக்கு உடன் கணினியை ஸ்கான் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றது.

மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்
கல்வியை ஆக்கிரமித்து வரும் கணனித்துறை காரணமாக ஒவ்வொரு கல்வித்துறை சார்ந்தும் காலத்திற்கு காலம் பல்வேறு மென்பொருட்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இவற்றின் வரிசையில் Essential Anatomy எனும் புத்தம் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. விஞ்ஞானத்துறையில் அதிக ஈடுபாடு உடைய மாணவர்களுக்கு இம்மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
அதாவது மனித உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் முப்பரிமாண முறையில் துல்லியமாகவும், விபரமாகவும் அறிந்துகொள்ள இம்மென்பொருள் பயன்படுகின்றது.
மேலும் இது Mac OS கணினிகளிலும் iPad, iPhone சாதனங்களிலும் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம்
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன. அதற்கிணங்க தற்போது சூரியப் படலத்தில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது இதனால் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய சக்தியை குறித்த மின்கலம் வழங்குகின்றது.
இந்நீண்ட பாவனையின் பொருட்டு இக்கணனிகளில் Ubuntu இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. WeWi Telecommunications எனும் கனடிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இக்கணனிகளின் விலையானது 300 டொலர்கள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 செக்கனில் இணைய உலகம்!
இணைய உலகம் என்றும் பரபரப்பானது. சுறுசுறுப்பாக இயங்கும் இணைய உலகத்திற்கு 24 மணித்தியாலங்கள் நிச்சயம் போதாது.
அங்கு 60 செக்கனுக்குள் பல்லாயிரக் கணக்கான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான பாவனையாளர்கள் தங்கள் நேரத்தை அதில் செலவழிக்கின்றனர்.
பேஸ்புக் லைக்கள், டுவிட்கள், ஸ்கைப் அழைப்புகள், பிலிக்கர்கள் படங்கள், யுடியுப் காணொளிகள் என்பன இதில் அடங்கும்.
இதனை தெளிவாகக் காட்டும் பொருட்டு 'கிவ்மீ' என்ற நிறுவனம் 'இன்போகிராப்' ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிசி மெக், பிஸ்னஸ் இன்சைடர், டெய்லிமெய்ல், போமட் போன்ற பிரபல இணையத்தளங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இதனை 'கிவ்மீ' வெளியிட்டுள்ளது
.
இதன் அடிப்படையில் நிமிடமொன்றில்
1. 216,000 படங்கள் இன்ஸ்ரகிராமில் பரிமாற்றப்படுகின்றன.
2. அமேசன் இணையத்தளத்தில் 83,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
3. பேஸ்புக்கில் 1.8 மில்லியன் 'லைக்ஸ்' போடப்படுகின்றது.
4. கூகுளில் 2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.
5. யுடியூப்பில் 72 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய காணொளிகள்.
6. 278,000 டுவிட்கள் பதிவு செய்யப்படுகின்றன.
7. புதிய இணைய முகவரிகள் 70 பதிவு செய்யப்படுவதுடன் 571 தளங்கள் உருவாக்கப்படுகின்றன.
8. 204 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றது.
Go-Globe.com கடந்த வருடம் இதேபோன்ற 'இன்போகிராப்' ஒன்றை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
.jpg)

.jpg)

.png)
+-+Copy.png)