Home
» சாதனையாளர்கள்
» கணவரை இழந்த நிலையிலும் ஆசிய அளவில் பிசினசில் சாதனை படைத்த 50 பெண்களில் ஒருவரான ரேணுகா
கணவரை இழந்த நிலையிலும் ஆசிய அளவில் பிசினசில் சாதனை படைத்த 50 பெண்களில் ஒருவரான ரேணுகா
என் வாழ்க்கையில் இரண்டையும் சரியான விதத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் என் குழந்தைகள் பிறந்த சில காலத்திலேயே திடீர் விபத்தில் கணவன் இறந்து விட்டார்.இதையடுத்து குடும்ப செலவிற்காக வேலை செய்ய வேண்டும். ஒரு அம்மாவாக பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும். இவ்விரண்டையும் சரியாக சமாளிக்க என் இளம் வயதிலேயே பல தியாகங்கள் செய்து பல மணி நேரம் கண்விழித்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
“அப்பா உயிரோடு இருந்திருந்தால், எல்லாம் கிடைத்திருக்குமே’ என பிள்ளைகள் ஏங்க கூடாது என்ற எண்ணத்தில் சோர்வே இல்லாமல் தொடர்ந்து உழைத்து பிசினசில் வளர்ச்சி அடைந்தேன். இன்ஜினியரிங் படித்திருந்தாலும் தனியார் வங்கியில் வேலை செய்தேன். என் திறமை மற்றும் உழைப்புக்கு அங்கீகாரமாக ஐ.சி.ஐ.சி.ஐ. வெஞ்சர் என்ற புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்து மேலாண் இயக்குனராக்கினர்.
பின், “மல்டிபிள் ஆல்டர்னேட் அசட் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்தை சொந்தமாக ஆரம்பித்தேன். இங்கு நிதி நிறுவனங்களில் பணத்தை வாங்கி லாப நோக்கில் நல்ல தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து உரிய காலத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி தரும் சவாலான வேலையில் பல கோடிகளை நிர்வகித்து சாதித்து காட்டினேன்.
இந்தியாவின் சூப்பர் மார்க்கெட் முதல் விமான நிறுவனங்கள் வரை என,பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆசிய அளவில் சாதனை படைத்த பெண்ணாக “போர்ப்ஸ்’ பத்திரிகை பாராட்டியது. சுருக்கமாக சொல்வதென்றால் நான் பூஜ்ஜியத்தில் துவங்கினாலும் கடினமாக உழைத்து வாழ்க்கையின் பல மேடு பள்ளங்களை தாண்டி ராஜ்ஜியம் வரை உயர்ந்து ஒரு பெண்ணாக சாதித்தேன்.ஆக வாழ் நினைத்தால் வாழ்லாம்- வழியா இல்லை பூமியில்” என்கிறார் ரேணுகா
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment