Home » Posts filed under உலகம்
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts
பிரான்ஸ்- பிரித்தானியா இடையே பெருஞ்சுவர்! என்ன நோக்கத்திற்காக தெரியுமா?
அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக, பிரித்தானிய அரசு சுமார் 2.7 மில்லியன் யூரோக்கள் வரை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் பெரிய ஜக்!
பெரிய ஜக்!
லண்டனில் 1902-ம் ஆண்டு, ஏழாம் எட்வர்ட் அரசராகப் பதவி ஏற்றார். அதற்கு, ஜெய்ப்பூர் மகாராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவுக்கு வரும் அரசர் மற்றும் விருந்தினர்கள் நீர் பருக வசதியாக, பிரமாண்டமான இரண்டு எவர்சில்வர் ஜாடிகள் உருவாக்கப்பட்டன. அந்த ஜாடிகள் ஒவ்வொன்றும் 16 மீட்டர் உயரம்கொண்டது. அதில், 8,182 லிட்டர் தண்ணீரை நிரப்பலாம். ஜாடிகளைத் தனது நினைவுப் பரிசாக, ஜெய்ப்பூர் மகாராஜாவுக்கு ஏழாம் எட்வர்ட் அளித்தார். இப்போதும் ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்த ஜாடிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.
உலக பூமி தினம் இன்று.!
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு அம்சம். இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் பிரதான நோக்கம் ஆகும்.
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து பூமி வருகிறது.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன. இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத உயிர்கள் வாழக்கூடிய தனி சிறப்பு பூமிக்கு மட்டுமே உண்டு.
உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்…
உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்…
1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2)அதை இரண்டால் பெருக்கவும்..
3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும் 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்…அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்… மற்ற (2 digit) எண் உங்களின் வயது…
1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2)அதை இரண்டால் பெருக்கவும்..
3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும் 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்…அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்… மற்ற (2 digit) எண் உங்களின் வயது…
2,300 ஆண்டுகள் பழைமையான சித்திரவதை கூடங்களை கொண்ட நிலவறை
மேற்படி நிலவறையில் சித்திரவதைகூடங்களுடன் இரத்தம் உறைந்திருந்த கிணறொன்றும் படுகொலைக் குழியொன்றும் காணப்படுகின்றன.
இந்த நிலவறை சித்திரவதை கூடங்கள் உலுடாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இப்ராஹிம் யில்மாஷ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலவறையானது கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் கட்டடங்களுடன் தொடர்பைக் கொண்டிருந்தன.
அச்சமயம் ஊமைகளாகவும் செவிடர்களாகவும் இருந்தவர்களே மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கைதிகளின் தலைகளை வெட்டி கிணற்றில் வீசிய பின் எஞ்சிய உடல் பகுதிகளை அந்தக் கைதிகளது உறவினர்களிடம் கையளித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலவறை சித்திரவதை கூடங்களை அருங்காட்சியகமாக மாற்றி 2016 ஆம் ஆண்டிற்குள் திறந்து வைக்க அகழ்வாராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
62 பேர் மட்டும் வசிக்கும் அமைதியான அற்புதத் தீவு (வீடியோ, படங்கள் இணைப்பு)
பசுபிக் சமுத்திரத் தீவான பால்மேர்ஸ்டன் என்பது உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடம்.
வருடத்தில் இரு தடவைகள்தான் அங்கு விநியோகக் கப்பல்கள் போகும்.
சீற்றம் மிக்க கடலில் அங்கு பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விசயம். அதனால், அங்கு செல்பவர்கள் மிகவும் குறைவு.
குக்ஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான டைனி பால்மேர்ஸ்டனில், 62 பேர்தான் வாழ்கிறார்கள்.
அவர்களில் மூன்று பேரைத் தவிர ஏனைய அனைவருமே, இங்கிலாந்தில் இருந்து 150 வருடங்களுக்கு முன்னதாக அங்கு குடியேறிய வில்லியம் மார்ஸ்டர்ஸ் என்பவரின் வாரிசுகள்தான்.
குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்வதால், அந்த மக்கள் தொகை அழிவின் விளிம்பில் இருக்கிறது.
இருந்தாலும் எந்தவிதமான வன்செயலும், கெடுபிடிகளும், போக்குவரத்து நெரிசல்களும் இல்லாத ஒரு அமைதித் தீவு அது.
காணொளி பார்க்க
காணொளி பார்க்க
சீனாவின் முதல் பெண் அரசியல்வாதியின் கல்லறை கண்டுபிடிப்பு- காணொளி
சீனாவின் முதல் பெண் ஆட்சியாளர் என்று கருதப்படும் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவரின் கல்லறையை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீன வரலாற்றின் ஒரு சிக்கலான பகுதி பற்றி அறிந்து கொள்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பெண் பிரதமராகக் கருதப்பட்ட ஷங்குவான் வானர் என்ற பெண் அரசியல்வாதியைக் குறித்த யூகங்கள் சமீப காலங்களில் தொலைக்காட்சி நாடகங்களிலும் அங்கு சித்தரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கவியாகவும் இருந்த ஷங்குவான் கி.பி 664லிலிருந்து 710 வரை சீனப் பேரரசி வூ செட்டியனிடம் பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது. அரண்மனையில் நடந்த சதித்திட்டம் ஒன்றில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஷங்குவானின் கல்லறை ஷான்ஸ்கி மாகாணத்தில் சியான்யங் பகுதியில் உள்ள விமான நிலையம் அருகே அமைந்துள்ளது. சமாதி அடிப்படையில் அந்தக் கல்லறையைக் கண்டறிய முடிந்ததாகக் கூறிய ஆய்வாளர்கள், அது மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதையும் தெரிவித்தார்கள்.
முன்காலத்தில் அதிகாரிகள் அதனை சேதப்படுத்தியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். எனினும், இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சமாதியின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. நான்கு சுற்றுச் சுவர்களும் இடிந்துள்ளன. தரையில் இருந்த ஓடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என்று இணை ஆராய்ச்சியாளரான கெங் குவிங்கெங் தெரிவித்தார்.
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்



















.jpg)











.png)
+-+Copy.png)

