Home
» சாதனையாளர்கள்
» இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கை தமிழ் மாணவன்
இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கை தமிழ் மாணவன்
இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று பெருமை சேர்த்த குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று 150,000 பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது.
இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன .
ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர் . முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக எம்
தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment