Home » Posts filed under ஆன்மீகம்
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts
கார்த்திகை விளக்கீடு-தீபத் திருநாள்-Photos&Video
கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும்இ கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன் பெயர்களால் வழங்கி வந்தனர்.
அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
கார்த்திகை மாதத்தின் பண்டிகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். அதாவது தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும். அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார்.
பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.
இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப் படுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இத்தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில்இ தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர் அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். சிவன் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் ஆறு பொறிகளை தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும்இ வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்து வழிபடுவர்.
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.
சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்று அர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும். சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார். உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான் சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன். சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார்.
தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்து தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
கார்த்திகை தீபதன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும் இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது. மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில்விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதி வடிவமாக காட்சி கொடுத்தது போல் நமக்கும் ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார்.
மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. நம் இல்லத்தில் கார்த்திகை தீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தை வைத்து கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும் கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும் . இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாக மஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்கு தீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரை மனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் சிவ-சக்தியின் அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்து சகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.
கார்திகை மாதம் முழுவதும் தீபம் வீடுகளில் தீபம் ஏற்றுவது. சிறப்பாகும். முடியாத பட்சத்தில் பரணி, கார்த்திகை, ரோகிணி மூன்று நாட்கள் மட்டுமாவது தீபமேற்றுவது சிறப்பாகும். அதாவது கார்த்திகை தீப நாளிற்கு முதல்நாள், கார்த்திகை தீபத்தன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள். வீட்டின் தலை வாசலில், கொல்லைபுற வாசலில், பூசை அறை வாசலில் என குறைந்த பட்சம் மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும். மற்றப்படி வீட்டில் உள்ள அறைகளின் வாசல்கள் மற்ற இடங்கள் எல்லாம் வீடு தீப ஒளியில் பிரகாசமாக இருக்கும் அளவிற்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.
முறைப்படி விரதமிருந்து தீபமேற்றி வழிபடும் அனைவரின வாழ்விலும் ஒளி பிறக்கும். பரிபூரண நம்பிக்கையுடன் கடைப்பிடியுங்கள் ஒளிமயமான எதிரகாலம் நிட்சயம்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பழக்கம்கள், கடமைகள் ......
பெண்கள்....
1.சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.
2. துளசி மாடத்திலிருந்துபூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது.துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.
3.சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு துவங்க தாளில் எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.
4. மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக பொலிவு வசீகரமுண்டாகும்.....
5.வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்..
மேலும் தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும்,மேல் நோக்கி எரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.
6.இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.
7.வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் வாயால் ஊதி அனைத்திலும் கூடாது ..
8.பெண்கள் பூமியை அதிர்ந்து உதைக்கவோ நடக்கவோ கூடாது ,குறிப்பாக குதிக்கால் மிக முக்கிய யோகலட்சுமி வாழும் இடமாகும், இதனால் பூமியை யார் உதைத்தாலும் நிச்சயம் உடனே தரித்திரம் பிடிக்கும்..
9.பெரிய காரியம்களுக்கு பெண்கள் தீட்டுடன் செல்ல நேர்ந்தால் சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல்/தோஷம் இல்லாமல் முடிவடையும்.
நமது
1.இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்
2. கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஓரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.
விளக்கம் ...
சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்...
சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும்பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்
3.குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது..
4.அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.
5.சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.
6.மருதாணி இலைகள் லக்ஷ்மி தேவி ஆகையால் கைகளால் உருவி பறிக்க வேண்டும் ஒடிக்க கூடாது.
7.அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.
8.ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.
9.நாம் செய்த நல்ல காரியத்தை (புண்ணியம் தருவது ) பிறரிடம் சொல்லக்கூடாது ,பாபத்தை எல்லோரிடமும் சொல்லவேண்டும் ..
10.தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும்.
இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால் திருமணத் தடை அகலும்.
உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.
கால்நடைகளுக்கு தீவனம்(உணவு ) அளித்தால் வாழ்வு வளம் பெறும்...
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
விபூதியை எடுக்க சில விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள வரிகளில் உள்ள முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.
கட்டை விரல்
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரல்
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
நடுவிரல்
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.
மோதிர விரல்
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டு விரல்
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம்எற்படும்.
மோதிர விரல் – கட்டை விரல்
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர்.
கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது.
மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது.
பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் !
அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது.
அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
தெரிந்துகொள்வோம் :
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம்.
சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள்.
சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது.
இதனால் கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது.
பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது.
அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
அனைத்து ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும்.
கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும்.
தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும்.
ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும்.
பங்கு சந்தை லாபகரமாக நடக்க வாய்ப்புள்ளது. நவதானியங்கள் விலை குறையும். பொன் ஆபரணங்கள் விலை ஏறும். இரும்பு, எண்ணை பொருட்கள் விலை அதிகரிக்கும்.
கடக குருவாக இருப்பதால், உலகில் சில பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம்.
பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள்.
குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.
உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம்.
மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும்.
துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மீனம்)
மீன இராசி அன்பர்களே… 19.6.2014 உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5-ம் இடத்திற்கு வந்து குரு பகவான் அமர்க்களமாக அமர போகிறார். அடேங்கப்பா இனி தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் யோகங்கள் வந்து சேரும். வழி தெரியாமல் அடர்ந்த காட்டில் அல்லல்பட்டவர்களுக்கு ஒத்தையடி பாதை தென்படுவதுபோல, முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். இதுவரையில் தேவையில்லா மனக்குழப்பத்தை கொடுத்து வந்த குரு பகவான், உங்கள் இராசிக்கு 5-ஆம் வீட்டில் அமர்ந்ததும் இனி நீங்கள் யோகசாலிகள்தான். அதுமட்டுமல்ல, உடல்நிலையில் பலசாலியாகவும் திகழ்வீர்கள். ஆம். குரு பகவான், 5-ஆம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியை பார்க்கிறார். அத்துடன், 9-ஆம் இடத்தை, அதாவது பாக்கிய ஸ்தானத்தையும், 11-ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். இனி என்ன கவலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நோய்நொடியிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல உடல்நலம் பெறுவீர்கள். வாடகை வீட்டில் படாதபாடுபட்ட நீங்கள், இனி சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியோடும், குடும்பத்தில் தன, தான்யத்தோடும் வாழ்வீர்கள். நல்லவை அனைத்தும் கிடைக்கும். எப்படி சொல்கிறேன் என்றால், 5-ம் இடம் யோகமான இடம். கார், பங்களா என்று வசதியாக கூட வாழ வழி செய்வார் குருபகவான். பிள்ளைகளின் திருமணத்தை உடனே நடத்தி கொடுப்பார். எதிர்காலம் பற்றி கவலை இல்லை. இனி எல்லாம் நல்ல காலம்தான் என்கிற மனஉறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும். தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்னைகள் தீரும். கவலை எல்லாம் பறந்தோடும். உத்தியோகம், வியபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பொன், பொருள் நன்றாக சேரும். அச்சத்தை போக்குவார் உச்ச குரு. சரி 5-ம் வீட்டில் இருக்கும் குரு, இப்போது உங்களுக்கு சொல்ல விரும்பும் ஆலோசனை என்னவெனில், “குருவாகிய நான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். குழப்பத்தையும், சஞ்சலத்தையும் விடுங்கள். “முடியும்” என்ற எண்ணத்தில் இருங்கள். நீங்கள் முடிசூடா மன்னர்தான்” என்கிறார். விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி நம்பிக்கையோடு வெற்றிபடியில் கால் வையுங்கள். ஸ்ரீஅஷ்டலஷ்மிகளும் உங்களை தேடி வருவார்கள். வளங்களை வரங்களாக தருவார்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்!
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (துலாம்)
துலா இராசி அன்பர்களே…
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார்.
உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 6-ம் இடத்தின் அதிபதியான குரு பகவான், 10-ம் இடத்திற்கு வருவது நன்மையே.
அதுவும் உச்சமாக அங்கு அமர்ந்து விடுகிறார்.
உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்னும் 2-ம் இடமும், சுகஸ்தானம் என்னும் 4-ம் இடமும், ரோகஸ்தானம் என்கிற 6-ஆம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், அந்த இடங்கள் தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க வழி செய்ய காத்திருக்கிறது.
உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், பெரும் உதவிகள் தேடி வரும். கைக்கு கை பணம் வரும்.
பொருளாதர வசதி பெருகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியத்தை பேசியே சாதித்துவிடுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். சொந்த வாகனம் வாங்கி அமர்க்களமாக நிறுத்துவீர்கள்.
கல்வி உயரும். மேற்படிப்பு, பட்டப்படிப்பு பிரமாதமாக தொடரும்.
6-ம் இடத்தை பொறுத்தவரையில் கடன், வழக்கு, ரோகம் இவை அனைத்தும் காணாமல் போய்விடும்.
திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகமும் அமையும்.
அரசாங்க உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வர வாய்ப்புள்ளது.
இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திர பாக்கியத்தை குருவின் அருளால் கிடைக்கப்பெறுவீர்கள்.
மனக்குழப்பம் தீரும். சண்டை, சச்சரவு தீரும். பொதுவாக, “பதவி போனவனுக்கு 10-ல் குரு” என்பார்கள்.
அதை பற்றி துளியளவும் கவலைக்கொள்ளவேண்டாம்.
காரணம், 3-ம் இடம், 6-ம் இடதின் அதிபதி, கேந்திரத்தில் இருந்தால் யோகத்தையே செய்வார்.
சோகத்தை கொடுக்க மாட்டார். சரி இவ்வளவு நன்மைகளை செய்யும் குரு பகவான், ஏதாவது பிரச்னையும் தருவாரா? எனக் கேட்டால், ஆம். கூட்டு தொழிலில் கவனமாக இருக்க சொல்கிறார்.
ஆவேசம், பரபரப்பு அடக்கி வையுங்கள். தேவையில்லா பேச்சு வேண்டாம்.
சாந்தமாக இருந்தால், சகலமும் உங்கள் வீடு தேடி வரும்.
ஸ்ரீமகாலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கன்னி)
கன்னி இராசி அன்பர்களே…
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வருகிறார்.
11-ம் இடம் லாபஸ்தானம். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும்.
அப்படி ஒரு யோகம் அடிக்க போகிறது.
உங்கள் இராசிக்கு 4-ம் வீடு, 7-ம் வீட்டின் அதிபதி குரு.
அதாவது சுகாதிபதி, சப்தமாதிபதி குரு பகவான்.
அவர் உங்கள் இராசிக்கு லாபத்தில் அமர்வதால், தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.
உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடத்தை பார்வை செய்வதால், அந்த இடங்கள் சுபிக்ஷம் அடைந்து நன்மைகளை கொடுக்கப்போகிறது.
3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம். உங்கள் செல்வாக்கு உயரும்.
இதுவரையில் அபகீர்த்தி அனுபவித்த சிலர் பெருமைப்பட பேசப்படுவர்.
முடியாத காரியமும் முழு முயற்சியால் முடிப்பீர்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை செய்வதால், பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் விலகி உங்கள் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி நடக்கும்.
திருமணம் ஆகுமா என்று ஏங்கி கொண்டு இருந்தவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும்.
மனைவியால் நல்ல யோகம் உண்டு.
பொதுவாக 11-ம் இடம் நல்ல யோகமான இடம். ஆகவே பல வழிகளில் நன்மைகள் நாடி வரும்.
கடல் கடந்து போகும் பாக்கியமும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இதுவரை தடைபட்ட கட்டட வேலை மட, மடவென எழும்.
இவ்வளவு நன்மைகள் செய்ய கூடிய குரு பகவான் சில விஷயங்களில் உங்களை கவனமாகவும் இருக்கச் சொல்கிறார்.
அதாவது வழக்கு இருந்தால் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நீயா-நானா என ஈகோ பார்க்க கூடாது. உடல்நலனில் கவனம் தேவை.
பெற்றோர் வசம் சுமுகமாக இருக்க வேண்டும்.
கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி விட்டு முன்னேற காலடி எடுத்து வையுங்கள்.
ஸ்ரீகஜலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (சிம்மம்)
சிம்ம இராசி அன்பர்களே…
19.6.2014 வியாழன் அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வந்து அமர்கிறார்.
அதாவது கடகத்தில் பட்டா போட்டு அமரப் போகிறார்.
“அய்யய்யோ 12-ல் குரு இருக்கலாமோ” என்று சிலர் பயப்படுவர். பயமே வேண்டாம்.
அந்த குருபகவான் உங்கள் இராசிக்கு 5-ம் வீடு, 8-வீட்டின் அதிபதி.
ஆகவே 8-க்குரிய குரு, 12-ல் வந்தால் இராஜயோகத்தை கொடுப்பார்.
அதாவது 8-க்குரியவன் 12-ல் வந்தால், “விபரீத இராஜயோகம்”. இனி தொட்டது துலங்கும்.
உங்களை தூக்கி எறிந்தவர்கள், உங்கள் முன் தலை வணங்குவார்கள்.
குரு உங்கள் இராசிக்கு 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடங்களை பார்வை செய்து, அந்த இடங்களை யோகம் பெறச் செய்கிறார்.
ஆகவே தடைபட்ட மேல் படிப்பு தொடரும். தகர டப்பா வண்டியை ஒரங்கட்டிவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகும் உண்டு.
சொந்த வீடு இல்லையே என்ற புலம்பல் தீரும். கடன் தொல்லை பெரும் அளவில் தொலையும்.
தீராத ரோகம் தீரும். கோர்ட், கேஸ் இவைகளில் வெற்றி கொடுக்கும்.
இருப்பினும், பூர்வீக சொத்து இருந்தால் அதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது.
குடும்ப ஸ்தானத்திற்கு லாபத்தில் குரு இருப்பதால், குடும்ப வாழ்க்கை அமையும்.
தெய்வ தரிசனம் அதிகரிக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும்.
ஜீவனத்திற்கு 7-ம் இடம் பார்வை பெறுவதால், பங்கு வர்த்தகத்தில் யோகத்தை கொடுக்கும்.
கூட்டுதொழில் லாபம் உண்டு. புத்திரஸ்தானத்திற்கு 4-ம் இடம் குரு பார்வை பெறுவதால், புத்திர- புத்திரிகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.
முக்கியமாக கஷ்டங்களை கொடுக்கும் அஷ்டம ஸ்தானம், குருவின் பார்வை பெறுவதால் வரும் கஷ்டங்கள் காற்றோடு ஓடி விடும்.
உறவினர் வருகையும், அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நடக்கும்.
பொதுவாக 12-ல் அமர்ந்த குரு, வதைக்க மாட்டார். வாழ வழி வகுப்பார்.
இது என் கருத்து. ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.
விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி முன்னேறுங்கள்.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கடகம்)
கடக இராசி அன்பர்களே…
19.6.2014 அன்று, குரு பகவான் உங்கள் இராசியில் வந்து அமரப்போகிறார்.
(ஜென்ம குரு). “பொதுவாக வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு” என்பார்கள். இதை கேள்விபட்டு பயந்து விடாதீர்கள்.
உங்கள் இராசியில் குரு அமரப்போகிறார் என்றால், குரு பகவான் உங்கள் இராசிக்கு யார்?.
9-ஆம் அதிபதிக்குரியவர். அதாவது பாக்கியாதிபதி. கோடீஸ்வரன் உங்களுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.
வணங்காதவர்களும் உங்களுக்கு வணக்கம் சொல்வார்கள். ஆகவே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகள் வாரி வழங்குவார்.
காரணம் உச்சம் பெற்றவர், அச்சத்தை போக்குவார். உங்கள் இராசிக்கு 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் அதாவது புத்திரஸ்தானம், சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம் இவைகள் அனைத்தும் FULL POWER பெற்று விட்டது.
இழுபறியாக இருந்த பிள்ளைகளின் திருமணம் டக்கென்று நடக்கும்.
மனைவியால் நன்மைகள் நடக்கும். அல்லது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.
கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புது வீட்டில் குடிபுக குரு பகவான் அருள் செய்வார்.
பொதுவாக 5-ம் வீட்டை குரு பார்த்தால், பள்ளத்தில் விழுந்தவன் பல்லாக்கில் அமர்வான்.
பெரும் சோதனைகளை கண்ட நீங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழப்போகிறீர்கள்.
சிலர் ஜென்ம குரு நன்மை செய்யாது என்று கூறினாலும் கவலைப்படாதீர்கள்.
அவர் (குரு) பார்வை சுபஸ்தானங்கள் மீது விழுகிறது ஆகவே அந்த ஸ்தானங்கள் உங்களுக்கு நன்மைகளையே செய்யும்.
பல காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.
இந்த குருபெயர்ச்சி சில நேரங்களில் உடல்நலனில் தொல்லைகள் கொடுத்தாலும், கவலைப்படதீர்கள்.
காரணம் அவன் 6-க்குரியவன்.
சிறு பிரச்னைகள் கொடுத்தாலும் அவனே 9-க்குரியவனாகவும் இருப்பதால், உடல்நலனில் பெரும் தொல்லைகளை தர மாட்டார்.
ஸ்ரீதனலஷ்மியின் அருள்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.
விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் அத்துடன் குருபகவானையும் வணங்கி வேலையை தொடங்குங்கள்.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மிதுனம்)
மிதுன இராசி அன்பர்களே…
19.6.2014 வியாழன் அன்று உங்கள் ஜென்ம இராசியை விட்டு 2-ம் இடத்திற்கு குரு பகவான் பிரவேசிக்க போகிறார்.
குரு உங்கள் இராசிக்கு 7,10-க்குரியவன். அதாவது சப்தமாதிபதி, ஜீவனாதிபதி. உங்கள் இராசிக்கு 2-ல் அமரும் குரு, 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்ய போகிறார்.
6-ஆம் இடம் என்பது, கடன், நோய்நொடி அறியப்படும் இடமாகும். அவை தீரப்போகிறது.
8-ம் இடம் வழக்கு தொல்லைகள் அறியப்படும் இடமாகும்.
வீண் வழக்குகள் விலகப் போகிறது. 10-ம் இடம் தொழில்துறையை பற்றி அறியப்படும் இடமாகும்.
தொழில், வியபாரம் புத்துணர்ச்சி பெற்று பிரமாதமாக நடக்க இருக்கிறது.
சொத்துக்கள் மீது வழக்கு இருந்தாலும் குருவின் பேரருளால் வெற்றி பெறும்.
நீண்ட நாட்களாக இருந்த பங்காளி சண்டைகளும் சுமுக தீர்வுக்கு வரும்.
தடைபட்ட கல்வி தொடரும். பயணங்கள், அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ஆனாலும் அதனால் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.
உத்தியோகம் செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் விரோதம் செய்யாமல் அனுசரித்து போவது நல்லது.
சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.
6-ம் இடத்தை குரு பார்வை செய்வதின் காரணமாக, யாருடைய ஜாமீனுக்கும் துணை போக வேண்டாம்.
தேவையில்லாமல் மற்றவர்களின் பிரச்னையில் தலையிடவும் வேண்டாம்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், புத்திர-புத்திரிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பார்.
பாக்கிய ஸ்தானத்திற்கு விரயஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், பெற்றோரின் உடல்நலனுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டிய காலம் இது.
சகோதரஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், அவர்களிடம் மனக்கசப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக 2-ம் இடத்தில் உள்ள குரு நன்மைகளையே செய்தாலும் கூட, அவசரமாக எதையும் சிந்திக்காமல் செய்ய வேண்டாம்.
அகலகால் வைக்க வேண்டாம். 10-ஆம் இடத்தை குரு பார்வை செய்வது நன்மைதான்.
ஆனால் பெரும் முதலீடு செய்யாமல் நிதானமாக செய்வது நன்மையை தரும். பிள்ளையாரை வணங்குங்கள்.
தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி வழிபட்டு முன்னேறுங்கள்.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மேஷம்)
மேஷ இராசி அன்பர்களே… உங்களுக்கு குரு பாக்கிய-விரயாதிபதி ஆவார். அவர், 19.6.2014 வியாழன் அன்று மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார். உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடங்களை குருபார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும். தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். விரயங்கள் தவிர்க்கப்படும். பொதுவாக குரு 4-ம் இடத்தில் அமர்ந்தால் உங்கள் இராசிக்கு யோகத்தை கொடுப்பார். எப்படியெனில், திரிகோணாதிபதி கேந்திரத்தில் அமர்ந்தால் வராத பணமும் கைக்கு டக்கென்று வந்து விடும். அதுமட்டுமல்ல, 4-ம் இடத்தை குறிக்கும் வீடு, வாகனம், கல்வி அத்தனையும் அவன் அருளால் உங்களை வந்தடையும். 8-ம் இடத்தை பார்வை செய்வதால், இதுவரையில் இழுத்துக்கொண்டு வந்த வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும். உறவினர் வருகையால் நற்செய்தி, கேளிக்கை, ஆடம்பர செலவு அதிகமாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தாயாருக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் பிணி நீங்கும். கடந்த ஆண்டு மூன்றாம் இடத்திலிருந்த குரு பகவான் அவ்வளவு திருப்தியான நன்மையை செய்யவில்லை என கவலையில் இருந்திருக்கலாம். தேவையில்லா பகை, விரயம், மனக்குழப்பத்தை கொடுத்து இருந்தாலும், தற்காலம் அவர் 4-ம் இடத்திற்கு வருவதால், இனி உங்களுக்கு நல்ல நேரமே. இருப்பினும் சிறு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள். அது என்னவெனில், வாகனத்தை ஓட்டும் போது மட்டும் சற்று நிதானம் தேவை. கடக குரு உச்சம் பெற்ற குரு. ஆகவே நன்மைகள் உங்களை தேடி, நாடி வரும். குரு பெயர்ச்சி அன்று விநாயகப்பெருமானையும், தட்சிணா மூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள். அன்று காலை முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, உற்சாகமாக உங்கள் வேலையை தொடங்குங்கள். சோதனைகள் பறந்துவிடும். சாதனைகள் உங்களை வந்தடையும். ஸ்ரீகஜலஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)
தனுசு இராசி அன்பர்களே…
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
“குரு அஷ்டமத்தில் வருகிறாரே அகப்பட்டோமடா சாமி” என்று அலற வேண்டாம்.
குரு உங்கள் ஜென்மாதிபதியும், சுகாதிபதியும் ஆவார்.
8-ம் வீட்டில் அமர்ந்தாலும் அவர், 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங்களுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது.
விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், “சுண்டைக்காய் கால், பணம் சுமைக்கூலி முக்கால் பணம்” கதையாக இருக்கும்.
அதாவது நாலணா சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள்.
இப்படிபட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும்.
குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
உங்கள் பேச்சு மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கிடைக்கவும் செய்யும்.
உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பால் நன்மைகள் தேடி வரும்.
பழைய இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். வாகன வசதி பெறும் பாக்கியம் உண்டு.
சகோதர – சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பிரச்னை இருந்தால் தீரும்.
பல நாட்களாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படலாம்.
ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. சிலர், “அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும்” என்பார்கள்.
கவலையோ, பயமோ அடைய தேவையில்லை.
8-ல் குரு இருந்தாலும், 2-ம் இடம், 4-ம் இடம் ஆகியவை அருமையான பார்வை பெற்று, பவர் ஆகிவிட்டது.
ஆகவே பிரச்னைகள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும்.
சரி, 8-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் முன்னேச்சரிக்கைகாக சொல்லும் ஆலோசனை என்ன என கேட்டால், “பயணங்களில் கவனம் தேவை.
உடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே ஆலோசனை.
விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி, வெற்றிபடியில் கால் வையுங்கள்.
ஸ்ரீதனலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மகரம்)
மகர இராசி அன்பர்களே…
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ம் இடத்திற்கு குடிபுக போகிறார்.
இதுவரையில் சப்தமே இல்லாமல் அடங்கி அமைதியாக இருந்த நீங்கள், சப்த நாடியும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கப்போகிறீர்கள்.
7-ம் இடத்தில் உச்சமாக இருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 12-ம் இடம், 3-ம் இடம் ஆகியவற்றின் அதிபதி ஆவர்.
அதாவது விரயாதிபதி, கீர்த்தி ஸ்தானாதிபதி ஆவார்.
அவர் சப்தமத்தில் அமர்ந்து உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜென்ம இராசியையும் பார்வை செய்வதால், இந்த இடங்கள் எல்லாம் ரீசார்ஜ் ஆகிவிட்டது.
இதுவரை இருட்டறையில் அடைப்பட்டிருந்த வண்டு, ஜன்னலை திறந்ததும் வெளியே பறந்தோடியது போல், பிரச்னைகள் எல்லாம் பஞ்சு போல் பறந்து விடும்.
உறவினர்களிடம் வாங்கிய கடன் சுமை தீரும். உறவினர் மனகசப்பு அகலும். திருமண வாய்ப்பு சிலருக்கு அமையும்.
பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், திருமணம் அமையவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோர் மனதில் சுபச்செய்தி சங்கீதமாக இசைக்கும்.
வேலை வேலை என்று தேடி திரிந்து அலைந்து கொண்டு இருந்தவர்கள் நல்ல இடத்தில் வேலையில் அமர்வீர்கள். அலைச்சல் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.
கடன் தொல்லை சற்று குறைந்துவிடும். பெற்றோர் உதவி சிலருக்கு கிட்டும். சிலருக்கு நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படலாம், எல்லாம் பணத்தால்தான் என்று சப்தம குரு சொல்லுகிறார்.
ஜென்மத்தை குருபார்வை செய்வதால், முக்கியமான திட்டங்கள் நிறைவேறும்.
சரி. 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், “திருமணமானவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் இருங்கள்.
நண்பர்களோடும் பகை வேண்டாம். படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம்“ என்கிறார்.
கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்குங்கள்.
அஷ்டலஷ்மிகளின் அருட்பார்வை பெறுவீர்கள்.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கும்பம்)
கும்ப இராசி அன்பர்களே…
19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடமான ரோக ஸ்தானத்திற்கு குடிபுக போகிறார்.
குரு உங்கள் இராசிக்கு தன, லாபாதிபதி. அதாவது, 2-ம் இடம், 11-ஆம் இடத்தின் அதிபதி ஆவர்.
6-ஆம் இடத்தில் குரு அமரலாமா? என்று யோசித்து பயப்பட வேண்டாம்.
6-ல் குரு அமர்ந்தாலும், அவர் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும், 2-ம் இடத்தையும் பார்வை செய்கிறார்.
இதனால் இந்த இடங்கள் பலம் பெற்று யோகத்தை செய்யப்போகிறது.
இதுவரை உங்கள் பேச்சை துச்சமாக மதித்தவர்கள் இனி உங்கள் வாக்கை வேத வாக்காக எடுத்து கொள்வர்.
தன, தான்யம் உங்களை நாடிவரும். பேச்சால் எதையும் சமாளித்து பிரச்னைகளை ஓவர் டேக் செய்துக்கொண்டு போய்விடுவீர்கள்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு தொடர்பால் நல்ல ஆதாயம் உண்டு.
தொழில்துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவர்.
இதுவரை காசு இல்லையே என்று கை பிசைந்து கொண்டு இருந்த நீங்கள், கரன்சி எண்ணப்போகிறீர்கள்.
விரயங்கள் தவிர்க்கப்படும். தேவையற்ற செலவு குறையும். மருத்துவ செலவும் குறைந்து விடும்.
வீடு, மனை வாங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.
கூட்டு தொழில் நல்ல லாபமாக நடக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.
உங்களை பார்த்து கேலி பேசியவர்கள் ஆச்சரியம் அடையும் விதமாக உங்கள் வாழ்க்கை நிலை மேலோங்கும்.
பொதுவாக குரு 6-ல் இருந்தாலும், கவலையே படவேண்டாம்.
காரணம், குருவின் பார்வைதான் பவராக வேலை செய்யும்.
முக்கியமாக சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும்.
சரி. 6-ல் இருக்கும் குரு பகவான், என்ன ஆலோசனை சொல்கிறார்? என கேட்டால், “தேடி வரும் வீண் சண்டையை பெரிதுப்படுத்தாமல் விட்டு விடு.
எதிரியே சோர்ந்து சமாதானமாக போய் விடுவான்.
வீண் வாக்குவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை.
உணவு விஷயத்திலும் கவனம் தேவை.” என்பதே குருவின் ஆலோசனையாகும்.
ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தியையும், குரு பகவானையும் வணங்கி வெற்றி நடைபோடுங்கள்.
ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திருக்கிறது.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (ரிஷபம்)
ரிஷப இராசி அன்பர்களே…
உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு 19.6.2014 வியாழன் அன்று, குரு பகவான் பிரவேசிக்க போகிறார். 3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம் என அழைக்கப்படும் இடமாகும்.
தற்காலம் 2-ம் இடத்தில் இருக்கும் குரு, கீர்த்தி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடத்திற்கு செல்வதால் நன்மையா, தீமையா? என்று பட்டிமன்றம் வைத்தால், 3-ஆம் இடம் நன்மை இல்லை என்று சிலர் கூறலாம், எழுதலாம்.
ஆனால் என்னை பொறுத்தவரையில் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்குரிய குரு பகவான், 3-ஆம் இடத்திற்கு செல்லுவது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்கிற ஜோதிட விதிப்படி யோகமே ஆகும்.
ஆகவே உங்கள் இராசிக்கு 8-க்கும், 11-க்கும் உரிய குரு பகவான், 3-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் இராசிக்கு 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடங்களை பொன்னான பார்வை செய்வதால், அவ்விடங்கள் மகா பலம் பெற்று வாரி வழங்க இருக்கிறது.
7-ம் இடம், திருமணத்தை குறிக்கும் இடம். 9-ம் இடம் பாக்கியம் கொடுக்கும் இடம். 11-ம் இடம் லாபத்தை கொடுக்கும் இடம்.
தடைபட்ட திருமணம் நடைபெறும். பழைய சொத்துக்கள் வந்தடையும். மேலதிகாரியின் உதவிகள் தேடி வரும்.
கடல் கடந்து செல்லும் பாக்கியம் வரும். அன்னியர்கள் நட்பும், அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதுமட்டுமல்ல, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல திருப்பமும் வரும். பெற்றோர்களால் உங்களுக்கு சில நன்மைகள் வந்தடையும்.
திருமணம் ஆனவர்களுக்கு மனைவி மூலமாக ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதரர், சகோதரி இருப்பின் அவர்களால் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.
பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கினாலும் கூட, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வாக்குறுதியை யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம்.
தேவையில்லா செலவு வரும். அதனை கட் செய்யுங்கள். பிறகென்ன அன்பவர்களே…
உங்களுக்கு யோகமோ யோகம்தான். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவானையும் வணங்குங்கள். தொட்டது துலங்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (விருச்சிகம்)
விருச்சிக இராசி அன்பர்களே…
19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு குடிபுக போகிறார்.
“ஓடியவனுக்கு ஒன்பதில் குரு” என்று சிலர் தவறாக கூறுவார்கள்.
ஓடினவனுக்கு அல்ல, ஓட்டினவனுக்கு என்பதே சரி.
அதாவது பல விதமான பிரச்னைகளை ஓட்டிவிட்டவனுக்கு ஒன்பதில் குரு.
ஆகவே இந்த குரு பெயர்ச்சியால் பல பிரச்னைகளை ஓட்டி வெற்றி பெற போகிறீர்கள்.
உங்கள் இராசிக்கு தன, பஞ்சமாதிபதி அதாவது 2-ம் வீடு, 5-ஆம் வீட்டின் அதிபதி, 9-ம் இடத்தில் அமர்வது பிரமாதமான யோகமே.
உச்சத்தில் அமர்ந்த குரு உங்கள் ஜென்மத்தை பார்க்கிறார்.
3-ம் இடமான கீர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.
5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்.
பொதுவாக நல்ல யோகத்தை ஜாதக கட்டத்தில் சில இடங்கள் கொடுக்கிறது.
இந்த 5-ம் இடம் குருவின் பார்வை பெற்றதால், முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டை அகலும். தேவையான வசதி பெருகும்.
இதுவரை இருந்த அலைச்சல், விரயம், அவப்பெயர் அகலும். உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.
உயர்பதவியும், குடும்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் வந்தடையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
தடைபட்ட திருமணம் நடைபெறும். வாடகை வீட்டில் இருந்து, சொந்த வீடு செல்ல வழி வகுக்கும்.
விரோதிகளும் அடி பணிவர். பொதுவாக நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வசதிகள் பெருகும். பலநாட்கள் ஏன், பல மாதங்கள் கடன்காரர்களிடம் கைகட்டி கொண்டு இருந்த நீங்கள், கடனை தூக்கி எறிவீர்கள்.
வாகன வசதி உண்டாகும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வசதி பெருகும்.
புதிய கூட்டாளி வர வாய்ப்புள்ளது. மேல் படிப்பு, பட்டப்படிப்பு தொடரும்.
வேலை வாய்ப்பு தேடி வரும். சரி, குரு பகவான் என்ன எச்சரிக்கிறார் என்றால், “வரும் பணத்தை பிடித்து வையுங்கள்.
பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாதீர்கள்.” இவைதான் 9-ம் இடதின் குரு பகவான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை.
விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள்.
ஐஸ்வரிய லஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு (Video, Photos)
தெய்வப் பெருந்தகை சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனாரின் புதுமையான வரலாறு முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் உயிரூட்டு தொழிநுட்பத்தில் DVD ஆக வெளிவந்துள்ளது.
சேக்கிழாரின் தெய்வீக வரிகளைக் கொண்டு ஏழு பாடல்களால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் குறும்படமானது சுமார் 30 நிமிடங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது. சென்னைப் பல்கலையின் கீழ் இயங்கும் ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனிமேஷன் துறை பேராசிரியரான திரு. ராம்குமாரினால் சமூக சேவை நோக்கில் இந்த அனிமேஷன் DVD உருவாக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் உயர்திரு. ராம்குமார் அவர்கள் சிவசின்னங்களில் ஒன்றான திருநீறை எப்போதும் தன் மேனியில் தரித்து இந்துசமய விழுமியங்களின் பால் தன் எண்ணங்களைச் செலுத்தி வாக்கும் வாழ்வும் ஒன்றென வாழ்ந்து வருபவர்.
இந்து சமயத்தின் தொன்மையை, நாயன்மார்களின் தெய்வீக அற்புதங்களை நமது இளைய தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நல்ல நோக்கில் மிகுந்த சிரத்தை எடுத்து இதனை உருவாக்கியுள்ளார்.
சேக்கிழாரின் தெய்வீக வரிகளைக் கொண்டு ஏழு பாடல்களால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் குறும்படமானது சுமார் 30 நிமிடங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது. சென்னைப் பல்கலையின் கீழ் இயங்கும் ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனிமேஷன் துறை பேராசிரியரான திரு. ராம்குமாரினால் சமூக சேவை நோக்கில் இந்த அனிமேஷன் DVD உருவாக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் உயர்திரு. ராம்குமார் அவர்கள் சிவசின்னங்களில் ஒன்றான திருநீறை எப்போதும் தன் மேனியில் தரித்து இந்துசமய விழுமியங்களின் பால் தன் எண்ணங்களைச் செலுத்தி வாக்கும் வாழ்வும் ஒன்றென வாழ்ந்து வருபவர்.
இந்து சமயத்தின் தொன்மையை, நாயன்மார்களின் தெய்வீக அற்புதங்களை நமது இளைய தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நல்ல நோக்கில் மிகுந்த சிரத்தை எடுத்து இதனை உருவாக்கியுள்ளார்.
ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை..
ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
மகாவீரர் பொன்மொழிகள்
ஜீவன் கர்மங்களை உருவாக்குவதில் சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஆனால், அந்தக் கர்மங்கள் செயல்பட வரும் போது ஜீவன் அந்தக் கர்மங்களுக்கு அடிமையாகி விடுகிறது. உதாரணமாக, ஒருவன் மரத்தில் ஏறும் போது பிறர் உதவியின்றி தானாக ஏறிவிடுகிறான். ஆனால், அவன் தவறிக் கீழே விழும் போது பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
யார் இந்த சத்ய சாய் பாபா ????
உலகிலுள்ள பலகோடி பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஒரு வாழும் தெய்வமாகக் கருதப்படும் பகவான் சத்ய சாய் பாபா அவர்கள் இன்று காலை இந்திய நேரப்படி காலை 7.40க்கு இறையடியெய்தினார். 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி பிறந்த இவரது இயற்பெயர் சத்ய நாராயன ராஜூ ஆகும். இவரின் தாயார் ஈஸ்வரம்மாளுக்கும். தந்தையார் பெயர் ராஜூ ரட்னகரம் ஆகும். பகவான் சத்திய சாகி பாபா ஆர்கள் இளமைக் காலத்தில் இருந்தே ஒரு அதிசயக் குழந்தையாகத் திகழ்ந்ததாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.
' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்'
மனிதனுக்கு நிம்மதி அளிப்பது தூக்கம். இதனை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
ஜோதிடத்தைப் பொறுத்தவரை 12ஆம் இடம் சயன (உறக்கம்) ஸ்தானம். பழங்கால ஜோதிட நூல்களில் இதைப் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக சுக்கிரன் 12இல் இருந்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறையில், ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற பெண்களுடன் அவர் உறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
சந்திரன் 12இல் இருந்தால் வாசனைத் திரவியங்கள் சூழ்ந்த அறையில், இலவம்பஞ்சணையில் அந்த ஜாதகர் உறங்குவார். அதேபோல் அவர் உண்ணும் உணவும் தரமிக்கதாகவே இருக்கும்.
பொதுவாக 12க்கு உரிய கிரகம் சிறப்பாக இருந்தாலும் படுத்த உடனே தூக்கம் வரும். ஒருவேளை 12இல் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் தனது கையை தலைக்கு கொடுத்து, காலைக் குறுக்கிக் கொண்டு உறங்குவார். நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.
பொதுவாக ரயில்வே பாதைக்கு அருகேயுள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு இதுபோன்ற கிரக அமைப்பு பெரும்பாலும் காணப்படும். அவர்கள் உயர்ரக கட்டில், பஞ்சணையில் தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வராது.
ராகு 12இல் இருந்தால் பாம்பு உள்ளிட்ட கொடிய ஊர்வனங்கள் உலாவக் கூடிய இடத்தில் அந்த ஜாதகர் உறங்க நேரிடும். மேலும் 6க்கு உரியவன் 12இல் இருந்து 12க்கு உரியவனுடன் சனி சேர்ந்தால் அந்த ஜாதகர் கொடிய பாம்புகள் சூழ்ந்த இடத்தில் அல்லது மரத்தில் தூங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குரு 12இல் மறைந்தால் அரசுக்கு சொந்தமான இடங்கள், கட்டிடங்கள், கோயில்களில் அந்த ஜாதகர் உறங்குவார்.
ஒரு சிலருக்கு 12க்கு உரிய கிரகம் 12ஆம் இடத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும். அவர்களுக்கு நிம்மதியான, நிலையான உறக்கம் கிடைக்கும். இப்போதும் நாம் ஒரு சிலரைப் பற்றிக் குறிப்பிடும் போது, "என்ன வேலையாக இருந்தாலும் இரவு 9 மணிக்கு அவர் தூங்கி விடுவார்; அதேபோல் எவ்வளவு அசதியாக இருந்தாலும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவார்" என்று கூறுவோம். அவர்களுடைய ஜாதகத்தில் 12க்கு உரியவர், 12இல் ஆட்சி பெற்றிருப்பார்.
மேலும் ஒரு சிலர் இரவு எத்தனை மணிக்கு படுத்தாலும், அதிகாலையிலேயே எழுந்துவிடும் தன்மை உடையவர்களாக இருப்பர். அவர்களுக்கு லக்னாதிபதி சிறப்பாக இருப்பதே காரணம். ஒரு சிலருக்கு 12இல் செவ்வாய் இருந்தால் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்குவார். இவர்களுக்கு வேறு எங்கு படுத்தாலும் தூக்கம் வராது.
லக்னாதிபதியும், 6க்கு உரியவரும் சேர்ந்திருந்தால் கோழித் தூக்கம்தான் கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் தூக்கத்தில் சிறு சப்தம் கேட்டாலும் உடனடியாக விழித்துக் கொள்வர். மீண்டும் தூக்கம் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.
இதேபோல் லக்னாதிபதியுடன், 6, 12க்கு உரியவர்கள் சேர்ந்திருந்தால் கனவுத் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவருக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது.
உதாரணமாக சுக்கிரன் 12இல் இருந்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறையில், ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற பெண்களுடன் அவர் உறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
சந்திரன் 12இல் இருந்தால் வாசனைத் திரவியங்கள் சூழ்ந்த அறையில், இலவம்பஞ்சணையில் அந்த ஜாதகர் உறங்குவார். அதேபோல் அவர் உண்ணும் உணவும் தரமிக்கதாகவே இருக்கும்.
பொதுவாக 12க்கு உரிய கிரகம் சிறப்பாக இருந்தாலும் படுத்த உடனே தூக்கம் வரும். ஒருவேளை 12இல் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் தனது கையை தலைக்கு கொடுத்து, காலைக் குறுக்கிக் கொண்டு உறங்குவார். நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.
பொதுவாக ரயில்வே பாதைக்கு அருகேயுள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு இதுபோன்ற கிரக அமைப்பு பெரும்பாலும் காணப்படும். அவர்கள் உயர்ரக கட்டில், பஞ்சணையில் தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வராது.
ராகு 12இல் இருந்தால் பாம்பு உள்ளிட்ட கொடிய ஊர்வனங்கள் உலாவக் கூடிய இடத்தில் அந்த ஜாதகர் உறங்க நேரிடும். மேலும் 6க்கு உரியவன் 12இல் இருந்து 12க்கு உரியவனுடன் சனி சேர்ந்தால் அந்த ஜாதகர் கொடிய பாம்புகள் சூழ்ந்த இடத்தில் அல்லது மரத்தில் தூங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குரு 12இல் மறைந்தால் அரசுக்கு சொந்தமான இடங்கள், கட்டிடங்கள், கோயில்களில் அந்த ஜாதகர் உறங்குவார்.
ஒரு சிலருக்கு 12க்கு உரிய கிரகம் 12ஆம் இடத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும். அவர்களுக்கு நிம்மதியான, நிலையான உறக்கம் கிடைக்கும். இப்போதும் நாம் ஒரு சிலரைப் பற்றிக் குறிப்பிடும் போது, "என்ன வேலையாக இருந்தாலும் இரவு 9 மணிக்கு அவர் தூங்கி விடுவார்; அதேபோல் எவ்வளவு அசதியாக இருந்தாலும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவார்" என்று கூறுவோம். அவர்களுடைய ஜாதகத்தில் 12க்கு உரியவர், 12இல் ஆட்சி பெற்றிருப்பார்.
மேலும் ஒரு சிலர் இரவு எத்தனை மணிக்கு படுத்தாலும், அதிகாலையிலேயே எழுந்துவிடும் தன்மை உடையவர்களாக இருப்பர். அவர்களுக்கு லக்னாதிபதி சிறப்பாக இருப்பதே காரணம். ஒரு சிலருக்கு 12இல் செவ்வாய் இருந்தால் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்குவார். இவர்களுக்கு வேறு எங்கு படுத்தாலும் தூக்கம் வராது.
லக்னாதிபதியும், 6க்கு உரியவரும் சேர்ந்திருந்தால் கோழித் தூக்கம்தான் கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் தூக்கத்தில் சிறு சப்தம் கேட்டாலும் உடனடியாக விழித்துக் கொள்வர். மீண்டும் தூக்கம் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.
இதேபோல் லக்னாதிபதியுடன், 6, 12க்கு உரியவர்கள் சேர்ந்திருந்தால் கனவுத் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவருக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது.
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.jpg)

.jpg)
.jpg)


.jpg)














.png)
+-+Copy.png)

