வேற்றுகிரக வாசிகளை கண்டுபிடிக்கும் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி....
உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் கடந்த 1994 ஆம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர்.
இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்த நிலையில், தென்மேற்கு சீனாவில், கிஸோ மாகாணத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கியை நிறுவ சீனா முடிவு எடுத்தது.
இதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த 8 ஆயிரம் பொதுமக்களை இடம் பெயர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்காக 2 குடியிருப்பு தொகுப்புகளாக 600 அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.
அந்தப் பகுதியில் 2011 ஆம் ஆண்டு, ரேடியோ தொலைநோக்கியை நிறுவும் பணியை சீனா தொடங்கியது.
இந்த திட்டத்துக்காக 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா முதலீடு செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணி நடந்து தற்போது முடிந்துள்ளது.
நட்சத்திரங்கள், கோள்கள் என பிரபஞ்சம் முழுவதும் சிக்னல்களை பெற இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த தொலைநோக்கியின் மிக முக்கிய அம்சம், இது வேற்றுக்கிரக வாழ்க்கை பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்பதுதான்.
மேலும் ஈர்ப்பு அலைகள் தேடல், நட்சத்திரங்கள், கோள்களில் இருந்து ரேடியோ உமிழ்வுகளை கண்டறிதல், வேற்றுக்கிரக வாழ்வு பற்றிய அறிகுறிகளை கவனித்தல் போன்றவற்றிற்கும் இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்













.png)
+-+Copy.png)


Post a Comment