கர்ப்ப கால உணவுகள்!
ஆகவே உங்களின் அன்றாட உணவில் தினமும் ஒருவகை கீரை, பருப்பு, பால், தயிர் ஆகியவை தவறாமல் இடம்பெறட்டும். தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். பாலில் கால்சியம், புரதம் உள்ளிட்ட தாதுஉப்புகள் அதிகம். ஆகவே அன்றாடம் ஒரு லிட்டர் வரையில், கொஞ்சம்-கொஞ்சமாகவேனும் பால் அருந்தி வரவேண்டும்.
தயிர், பால்பொருட்கள், கொண்டகடலை, பட்டாணி சாப்பிடலாம். இத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் மருத்துவர் ஆலோசனைபேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் மாத்திரையைவிட பால் நல்லது. பொதுவாக கர்ப்பமான 4-ம் மாதத்தில் அனைவருக்கும் வரும் பிரச்னை-மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.
நிறைய கீரை- பழங்கள் சாப்பிடுவதுதான், இந்த பிரச்னைக்கு அருமருந்து. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில் பப்பாளி, அன்னாசியை தவிர்ப்பது நல்லது. `இத்தகைய பழங்களால் கரு கலைந்துவிடும்' என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் இதைனை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை.
`கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறுதான் சாப்பிட வேண்டும்' என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. அப்படியாக அரை வயிற்றுக்கு சாப்பிட்டால், பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும். இதுதவிர, பிரசவத்துக்கு முன் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, தாய்சேய் இருவரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கும் வாய்ப்பு போன்றவை ஏற்படலாம்.
அதேவேளையில் `இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டுமே?' என்று ஊட்டமாக சாப்பிட்டாலும், சங்கடம்தான். அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடைவரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது. கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்தஅழுத்தம் அதிகரிக்கும். எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி, பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிவிடும்.
இதுதவிர பிரசவத்திலும் சிக்கல் வரலாம். ஆகவே கொழுப்பு சத்து குறைந்த-நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது. மேலும் அடர் பச்சை-மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நிரம்ப உள்ளன.
கர்ப்பிணிகள் சாப்பாட்டில் மட்டுமல்ல, குடிநீர் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி-வடிகட்டி குடியுங்கள். இல்லையெனில், அத்தகைய அசுத்த நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம். சில பெண்களுக்கு, எட்டாம்-ஒன்பதாம் மாதங்களில், உடம்பில் நீர்கோத்து கை-கால்கள் வீங்கிவிடும். இப்படிப்பட்டவர்கள் உணவில் உப்பை குறைத்து கொள்வது அவசியம்.
இதுதவிர பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால், உடம்பில் தேங்கி நிற்கும் நீர் சிறுநீராக வெளியேறி, எடை குறையும்.
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
கர்ப்ப காலத்தில் 2 கப்களுக்கு மேல் காபி குடிக்கக் கூடாது. கார்பனேட்டட் குளிர்பானங்கள், வெளிப்புற உணவுகள், பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், பேக்கிங் சோடா கலந்த உணவுகள், பேக்கரி உணவுகள், அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக எண்ணெய், அதிக மசாலா-காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல இருந்தாலும், அதில் இருக்கும் அதிகப்படியான உப்பு-எண்ணெய், உடலுக்கு ஊறுவிளைவிக்கும். தவிர்த்துவிடுங்கள். உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுபொருட்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை அறவே தவிருங்கள்.
`கருவுற்ற காலத்தில் ஆரோக்கிய உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு, நல்ல உடல் நலத்துடன் குழந்தைகள் பிறக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், `டைப்-2 நீரிழிவு, இதயநோய், மனஅழுத்தம்' உள்ளிட்ட எந்த பிரச்னைகளும் வருவதில்லை, ஆனால் வைட்டமின் பி-12, போலிக் அமில பற்றாக்குறையோடு இருக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், இன்சுலின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொகுப்பு
வி.ஷாலு
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment