Home
» உங்களுக்கு தெரியுமா!
» பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ஈஃபிள் டவரை என்ன செய்யப் போகிறார்கள் தெரியுமா?
பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ஈஃபிள் டவரை என்ன செய்யப் போகிறார்கள் தெரியுமா?
பயங்கரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக ஈஃபிள் டவரை சுற்றி 8 அடி உரத்தில் வலிமையான கண்ணாடி சுவர் எழுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக தலை நிமிர்ந்து நிற்கும் ஈஃபிள் கோபுரத்தை அடுத்த தலைமுறையும் கொண்டாடும் பொருட்டு அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி தற்போது போடப்பட்டிருக்கும் உலோக வேலிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு கண்ணாடி சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாரிஸ் நகர மேயர் அலுவகம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிரடி திட்டத்திற்காக 20 மில்லியன் யூரோ செலவாகும் என்று வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதற்கான பணிகள் துவங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து தலைநகர் பாரிஸ் உச்சகட்ட பாதுகாப்பு வலையத்தில் உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த யூலை மாதம் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பயங்கரவாத ஆதரவாளர் ஒருவர் லொறியை செலுத்தி 86 பேர் உடல் நசுங்கி இறக்க காரணமானார்.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த யூரோ கால்பந்து போட்டிகளின் போது, ஈஃபில் கோபுரத்தைச் சுற்றி உலோக வேலிகள் அமைக்கப்பட்டது. தற்போது திட்டமிட்டுள்ள அந்த கண்ணாடி சுவர் எழுப்புவதால் 3 வகையான நோக்கத்தை பூர்த்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஈஃபிள் கோபுரத்தை அழகு படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவது மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தல்களில் இருந்து காப்பது என மேயர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment