Home
» உங்களுக்கு தெரியுமா!
» உலக மக்களால் வெறுக்கப்படும் உலக அதிசயம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
உலக மக்களால் வெறுக்கப்படும் உலக அதிசயம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
உலகில் எத்தனையோ உலக அதிசயங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் மனிதர்களை ஈர்க்கும் வகையில் அமையப்பெற்றிருக்கும். ஆனால் உலக அதிசயமாக உருவாக்கப்பட்டு இறுதியில் உலக மக்களால் வெறுக்கப்படும் உலக அதிசயமும் இருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
அதுதான் பிரித்தானிய நாட்டின் அடையாளச் சின்னமாகவும். பிரித்தானிய நாட்டின் பழம் பெரும் பொக்கிஷமாக திகழும் பிக்பென் மணிக்கூட்டு கோபுரம்.
உலகின் மிகப் பெரிய கடிகாரமாக பிக்பென் விளங்குகின்றது. ஐக்கிய இராட்சியத்தின் லண்டன் நகரின் வெஸ்ட் மினிஸ்டர் கட்டடத்தொகுதியில் இந்தக் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
சென் ஸ்டீவன்சனின் கோபுரம், பிக்பென் கோபுரம் இதனை குறிப்பிட்டாலும் "உண்மையில் பிக்பென் என்பது கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருக்கும் மணியே ஆகும்."
பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் வைரவிழாவினை முன்னிட்டு அவருக்கு கௌரவமளிக்கும் விதமாக இந்த பிக்பென் கோபுரத்திற்கு "எலிசபெத் கோபுரம்" என பெயர் சூட்டப்பட்டது.
மகாராணியார் முடிசூட்டி 60 அண்டுகளை கடந்ததற்காகவே இந்த வைர விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பிக்பென் கோபுரத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனால் அங்கிகாரம் வழங்கப்பட்டது.
பிக்பென்னின் தோற்றம்
1834 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி லண்டனில் நாடாளுமன்றக் கட்டடம்( வெஸ்ட் மினிஸ்டர் மாளிகை) தீ விபத்துக்குள்ளானது. அந்நேரத்தில் நாடாளுமன்றக் கட்டடத்தை மீள கட்டுவதற்கான சிறந்த கலைஞர்களின் தேர்வு இடம் பெற்றுக் கொண்டிருந்தது.
இப்போட்டியில் பல திறமை மிக்க கலைஞர்கள் தமது படைப்புக்களை பறை சாற்றி கொண்டிருந்தார்கள். அதில் சார்ஸ் பெரி என்ற கலைஞரும் கலந்துக் கொண்டிருந்தார். இவரின் வரைபடம் 4 பக்கமும் கடிகாரங்களை கொண்ட கோபுரம் ஒன்றை சித்தரிப்பதாக அமைந்திருந்தது.
இறுதிப்போட்டியில் சார்ல்ஸ் பெரியின் கோபுரமே வெற்றியீட்டியது. இன்று லண்டன் நகரின் அடையாளச்சின்னமாக சார்ல்ஸ் பெரியின் பிக்பென் கோபுரமே உள்ளது.
பிக்பென்னின் கட்டமைப்பு
பிக்பென் கோபுரத்தின் உயரம் 96.3 மீற்றர் (316 அடி) ஆகும்.
முதல் 61 மீற்றர் கடிகார கோபுரத்திற்குரியது. கருங்கல் பாறையினால் இது அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகள் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளன.
4 மீற்றர் சுற்றுக் கொண்ட கொங்ரீட் கல்லின் மீது குறித்த கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு 4 முகங்கள் உள்ளன. 55 மீற்றர் உயரத்தில் மேல் முகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சுற்றளவு 4650 கன மீற்றர்களாகும். கடிகார முள்ளின் விசாலத்தன்மையை அடிப்படையாக கொண்டு இதனை உலகின் மிகப் பெரிய நான்முக கோபுரம் என்கின்றனர்.
பிக்பென்னின் கட்டுமானம்
பிக்பென் பிரதான நிர்மானிப்பு பொறியிலாளராக சார்ல்ஸ் பெரி காணப்பட்டாலும் அவர் வாஸ்து விஞ்ஞானி பியுஜியன் என்பவரின் உதவியைப் பெற்றுக் கொண்டார். பியுஜியனின் இறுதி நிர்மானிப்பு கோபுரமும் இதுவே.
இந்த கோபுரத்தை உருவாக்குவதற்கு பியுஜியன் இரவுப்பகல் பாடுபட்டார் அதன் காரணமாக மனரீதியிலான பாதிப்பை எதிர்நோக்கி இறுதியில் மரணத்தை தழுவினார்.
இதேவேளை சேர்.பென்சமின் ஹோல் என்பவரை சிறப்பிக்கும் முகமாகவே குறித்த கோபுரத்திற்கு பிக்பென் என பெயரிட்டதாக கருதுகின்றனர். அவர் இதனை நிர்மானிக்கும் பாரிய பொறுப்பை ஏற்றிருந்தார். இவரை அனைவரும் பிக்பென் என செல்லமாக அழைப்பதால் அதனையே இந்த கோபுரத்திற்கும் பயன்படுத்த தொடங்கினர்.
உலகம் வெறுக்கும் உலக அதிசயம்
தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், சஞ்சிகைகளில் அடிக்கடி காணக்கிடைப்பதால் சுற்றுலாப்பயணிகள் பார்க்க விரும்பாத உலக அதிசயங்களும் பல உள்ளன. இவை உலகம் வெறுக்கும் உலக அதிசயம்( most dissappoiting wonders of the world) என்று கூறப்படுகின்றது.
அதனையும் உலக மக்களே தெரிவு செய்துள்ளனர். 2007 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. ஐக்கிய இராச்சியத்தில் வெறுக்கப்படும் உலக அதிசயம் என்றும் உலக மக்களால் வெறுக்கப்படும் உலக அதிசயம் என்றும் இதனை 2 வகைப்படுத்தலாம்.
ஐக்கிய இராச்சியத்தில் அனைவராலும் வெறுக்கப்படும் அதிசயங்களுள் முதலில் இருப்பது பிக்பென் கோபுரமே ஆகும்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment