மக்கள் பணத்தில் வயாக்ரா மாத்திரைகளை வாங்கிக் குவித்த ஜனாதிபதி!
அரசுப் பணத்தில் 400 வயாக்ரா மாத்திரைகளை வாங்கியதாக தென்கொரிய ஜனாதிபதி பார்க் குன் ஹை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென்கொரிய ஜனாதிபதியான பார்க் குன் ஹை என்பவர் தனது 40 ஆண்டுகால தோழியும், தொண்டு நிறுவனங்களை நடத்தி வருபவருமான சோய் சூன் சில் என்பவருக்கு அரசின் பல்வேறு அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் பல தொண்டு நிறுவனங்களுக்கு வந்த பணத்தை, தன் தனிப்பட்ட செலவுகளுக்காக சோய் பயன்படுத்தியததாகவும், நெருங்கிய தோழி என்பதால் இந்த மோசடியை தென்கொரிய ஜனாதிபதி கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தென்கொரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில், நானூறு வயாக்ரா மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரைகளுக்கான பணமானது, ஜனாதிபதி அலுவலகமே செலுத்தியுள்ளது. ஆனால் இந்த மாத்திரைகளில் ஒன்று கூட தற்போது வரை பயன்படுத்தப்படவில்லை.
தென் கொரிய ஜனாதிபதி கிழக்கு ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அதிக உயரத்தில் விமானம் பறக்கும் போது ஏற்படும் சில உடல்நலக்குறைபாடுகளை சரிசெய்வதற்காக இந்த வயாக்ரா மாத்திரைகள் வாங்கப்பட்டதாக தென் கொரிய ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். ஆனால் மக்கள் இதை நம்புவதாக இல்லை.
இந்த வயாக்ரா விவகாரம் வெளியில் தெரிந்ததிலிருந்து தென் கொரிய மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தென்கொரிய தலைநகர் சியோலில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment