வருகிறது தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ‛வாஹனா'....
சர்வதேச அளவில் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக்கொள்ள தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ஒன்றை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த குட்டி விமானத்திற்கு ‛வாஹனா' என்று ஏர்பஸ் பெயரிட்டுள்ளது. குட்டி விமானம் என்று குறிப்பிட்டாலும், வாஹனா, கிட்டத்தட்ட ஒரு ஹெலிகாப்டர் போல வடிமைப்பிலும், இயக்கத்திலும் காணப்படுகிறது.
முதற்கட்ட வடிவமைப்பில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் தயாராகி வரும் வாஹனா எதிர்காலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என ஏர்பஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பைக் போன்ற முன்புற வடிவத்தை கொண்ட வாஹனா பிளாஸ்டிக் மேற்கூரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது மழை, வெயில் மற்றும் காற்றின் வீச்சிலிருந்து விமான ஓட்டியை பாதுகாக்கும்.
இந்த குட்டி விமானம் ஏறி இறங்குவதற்கு ஓடுதளம் தேவையில்லை. நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பும். இதனால் தேவைப்படும் இடத்தில் விமானத்தை இறக்கிக் கொள்ளலாம்.
தரையில் லேண்டிங் ஆனவுடன், இறக்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால், பார்க்கிங் இடப் பிரச்னை இருக்காது.
அனைத்து சோதனைகளும் முடிவடைந்து, அடுத்த ஆண்டு இறுதிக்குள் வாஹனா தயாராகும் என்று கூறி உள்ள ஏர் பஸ் நிறுவனம் வரும் 2020ம் ஆண்டு முழு அளவில் விற்பனைக்கு வரும் என்று கூறி உள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் வாஹனா தயாரிப்பு துவங்கியது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர், வடிவமைப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வாஹனாவை வாங்க பல நிறுவனங்கள் இப்போதிருந்தே போட்டி போட்டு வருகின்றன.
பொதுவாக விமானங்களை இயக்க பைலட் பயிற்சி கட்டாயம். பைலட் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இந்த ஏர் டாக்சியை பயன்படுத்த முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் வகையில் இந்த குட்டி விமானம் தயாரிக்கப்படும் போது, பைலட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நகரங்களில் ஒரு இடத்தில் இருந்து மிக குறைந்த நேரத்தில் மற்றொரு இடத்திற்கு செல்லவும், அவசிய மருந்துகளை அவசரமாக கொண்டு செல்லவும், ஒரு நகரத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு நகரத்திற்கு செல்லவும் இந்த வாஹனா ஏர் டாக்சி பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment