ஆளுநர் மாளிகையில் பாதாள அறை கண்டுபிடிப்பு!
மராட்டிய மாநில ஆளுநர் மாளிகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மராட்டிய மாநில ஆளுநர் மாளிகை மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதாள அறை இருப்பதாக மூத்த குடிமக்கள் சிலர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரிவித்து இருந்தனர். இதனை கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் கடந்த 12–ந் திகதி, ஆளுநர் மாளிகையின் கிழக்குப்புறம் இருந்த சுவரை பொதுப்பணித்துறை ஊழியர்கள் இடித்து அகற்றினர்.
அப்போது, அங்கு 20 அடி உயர கதவு இருந்தது. அதை திறந்து உள்ளே சென்றபோது சரிவு பாதை அமைக்கப்பட்டு அது பாதாளத்துக்குள் சென்றது.
அதற்குள் இறங்கி பார்த்தபோது, 150 மீற்றர் நீளத்தில் பாதை தென்பட்டது. பாதாளத்தில் இருந்த அந்த பாதையின் இரு புறங்களிலும் சிறியதும், பெரியதுமான 13 அறைகள் இருந்தன. ஆயுதங்கள், தோட்டாக்கள், ஆயுதங்கள் பழுதுபார்க்கும் அறை என ஒவ்வொன்றிலும் பெயர் பலகை இருந்தது.
ஒட்டுமொத்த இந்த பாதாள அறை 5 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் பரப்பளவை கொண்டதாக இருந்தது. மேலும் இது பாதாள சாக்கடை வசதியுடன், சுத்தமான காற்றுடன் கூடிய சூரிய வெளிச்சம் பிரவேசிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆளுநர் வித்யாசாகர் ராவும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் பாதாள அறையை நேரில் பார்வையிட்டனர்.
இந்த பாதாள அறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1869– 1875–ம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை போருக்காக பதுங்கு குழியாக பயன்படுத்தி இருக்கலாம் எனவும் தெரிகிறது. நாடு சுதந்திரம் பெறும் தருவாயில், அதனை சுவர் அமைத்து மூடி இருக்கலாம் என்று தெரிகிறது.
பாதாள அறையை பேணி பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார்.

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment