யாமறிந்த யாழ் மொழியில் கலக்கும் “வெள்ளை முகிலே”
இனம்,மொழி கடந்து பாரெங்கும் பட்டையை கிளப்பிய "வை திஸ் கொலைவெறி" பாடலைக் கேட்கும் எவருக்கும், ஆங்கில சொற்களின் நடுவே ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஒளித்து வைப்பது தான் இக்காலத்தில் வெற்றிப் பாடலின் தாரகமந்திரமாகும் என தோன்றினால் அது தவறில்லை. ஏனெனில் அதை பின்பற்றி வந்த பாடல்களும் ஹிட் ஆகிவிட்டன.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளிவந்த எமது புலம்பெயர் இளையோரின் "வெள்ளை முகிலே"பாடலின் வெற்றியாக வியாபித்திருப்பது என்னவோ, அவர்கள் தம் தாய்மொழி மீது கொண்ட பாசம் தான்.
அதிலும் ஒருபடி மேலே சென்று "தேக்கு மரம்", "பாக்குநீர்" என் மண்ணின் மகிழ்வுகளை மழையாக தூறி மனம் தொடுகிறது "வெள்ளை முகிலே". மாசில்லா மண்ணின் மொழியிலே தரமான பாடல் தந்த GJ Arts இளைஞர்கள் பாராட்டப்பட நிச்சயமாக வேண்டியவர்களே.
மெல்லிசை தந்த கஜிநாத், அதில் சொல்லோவியம் வரைந்த பரந்தாமன், குயிலொலி எழுப்பிய சுஜீகா, மயிலாட்டமாடிய ப்ரியா, திறம்பட இயக்கிய நிஜந்தன், சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்ட திலீப் உள்ளிட்ட ஒட்டுமொத்த GJ Arts கலைக்கூடத்திற்கும், கலர் எடிட்டிங் மேற்கொண்ட சுவிஸ் RIA Media-விற்கும் எமது வாழ்த்துக்கள்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment