சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லை! பார்வையற்ற மாணவன் மிகப்பெரும் சாதனை!
சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லையென தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் பயின்ற மாணவன் நிரூபித்துள்ளார்.
இரு கண்களும் பார்வை இழந்த சொர்ணலிங்கம் தர்மதன் உயர்தர கலைப்பிரிவில் தமிழ், இந்துநாகரீகம், அரசியல் ஆகிய மூன்று பாடங்களிலும் சிறப்பு சித்தியான 3A எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும் தேசிய ரீதியில் ஐம்பத்துநான்காவது இடத்தையும் பிடித்துள்ளார். தனது இரு கண்களில் பார்வையை இழந்த நிலையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம். எனது 9 வயதில் இரு கண் பார்வையையும் முற்றாக இழந்து விட்டேன்.
ஆனால் நம்பிக்கையை நான் இழக்கவில்லை. வாழ்வகத்தின் உதவியுடன் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கண் பார்வையுள்ள சாதாரண மாணவர்களுடனேயே கற்றேன். எனது விடாமுயற்சிக்கு ஆசிரியர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்தார்கள்.
அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன் என சொர்ணலிங்கம் தர்மதன் தெரிவித்துள்ளார். இவர் காங்கேசன் துறை சந்தை வீதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கோண்டாவில் மேற்கில் வசித்து வருகின்றார். இவரின் தந்தையான சொர்ணலிங்கம் என்பவர் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சொர்ணலிங்கம் தர்மதனுக்கு எமது முத்துமணி இணையத்தின் சார்பாக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment