உன் அருகே...

எல்லாம் இருந்தும்
 வெறுமைக் காற்று வந்து
வெற்றிடம் நிரப்பும்..
ஒவ்வொரு பொழுதும்
 உன் மூச்சே உனக்கு
 கனக்கும் உலகை
 ஒளிர்விக்கும்
 கதிரவன் உன் கண்களில்
மட்டும் இருளை பீச்சுவான்..


 நினைவுகள் எல்லாம்
 எதிர்காலத்தை புதைத்து விட்டு
பின்நோக்கி செல்லும்
உன்னோடு உயிராக
 உனக்குள்ளே கலந்த
 உன்னவள் உன் அருகே ..

 இல்லையென்றால்
உன் வீட்டு நாட்காட்டியும்
கடிகார முட்களும் கூட
 உன் இதயத்தை போலவே
 நின்று விடத்தான் துடிக்கும்..
என்ன செய்வது உன் அருகே
வீசும் காற்றுக்கும்
உயிர் கொடுப்பவள்
அவள்தானே..!      

                                                 திருமலை சோமு                     

3 கருத்துரைகள்:

gayathri said...

very nicelines

aval inri oru anuvum asaiyathu

Thirumalai somu said...

எனது கவிதையை மறு பதிவு செய்தமைக்கும், கருத்து சொன்ன தோழிக்கும் நன்றி

Thirumalai somu said...

எனது கவிதையை மறு பதிவு செய்தமைக்கும், கருத்து சொன்ன தோழிக்கும் நன்றி

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv