ஒரே ஒரு மரத்தினால், ஈஸ்டர் தீவில் மனித இனம் அழிந்த கதை? ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல்
இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுது அதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.
கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன. இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர். டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.
நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர். அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர். அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.
உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.
உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.
இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களையும், உயிரினங்களையும் அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, இக்கதை பகிர்ந்து கொள்ளப்பட்டது.
You may also Like
1 கருத்துரைகள்:
- chenlina said...
-
chenlina20160401
michael kors outlet
louis vuitton handbags
coach factory outlet
louis vuitton handbags
burberry scarf
coach factorty outlet
michael kors uk
tory burch boots
hollister kids
louis vuitton handbags
true religion outlet
kobe 9
kevin durant shoes 2015
kate spade handbags
louis vuitton handbags
ray ban sunglasses uk
coach factorty outlet
louboutin femme
gucci handbags
ray ban sunglasses
coach outlet store online
michael kors outlet
air force 1
louis vuitton outlet
jordan 3 white cenment
beats by dr dre
michael kors outlet
nike trainers uk
burberry handbags
louis vuitton handbags
michael kors outlet
coach outlet online
michael kors handbags
michael kors outlet online
gucci handbags
coach outlet online
true religion outlet
kobe 10
louis vuitton handbags
louis vuitton outlet stores
as -
11:21:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
















.png)
+-+Copy.png)


Post a Comment