விடுதலைக்கு உதவுமாறு தமிழ் மக்களுக்கு அரசியல் கைதிகள் கடிதம்
அனைத்து தமிழ் உறவுகளும் நான்பெரிது, நீ பெரிது என்று பாராமல், பல்கலைக்கழக சமூகத்தினூடாகவும், வர்த்தக சமூகத்தினூடாகவும், தமிழ் கலை கலாசாரச் சங்கங்களூடாகவும், புலம்பெயர் சமூகத்தினூடாகவும், மனித உரிமை, மனித உரிமைக் கண்காணிப்பகத்தினூடாகவும், சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், தமிழ் அரசியல் கட்சிகளின் உன்னத பலத்தோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து உங்கள் உறவுகளாகிய எங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்' என தமிழ் மக்களிடம் பகிரங்க கடிதமொன்றின் மூலம் கோரியுள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல்லாண்டு காலமாக இலங்கையின் சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்தவர்கள், முற்றிலும் வலுவிழந்தவர்கள், முதியோர், குழந்தைகள், தாய்மார்கள், அநாதைகள் என பல்வேறு பட்டவர்களாக இருக்கும் அரசியல் கைதிகளாகிய எங்களுக்கு, வழக்குகளிலும் முன்னேற்றமில்லாத நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டம் என்னும் பெயரில் நீண்ட காலத்தின்பின் உயர்நீதிமன்றத் தீர்ப்பினூடாக விடுதலை செய்யப்பட்டிருந்த சிலரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பூஸாச் சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதேபோல் இன்னும் எவரையெல்லாம் இவர்கள் கொண்டுசெல்லப்போகிறார்களோ தெரியவில்லை. ஏற்கனவே இப்படிப்பலர் உள்ளனர் என்பதும், இப்படியெல்லாம் நடந்ததும், நடந்துகொண்டிருப்பதும் உலகம் அறிந்த உண்மை. இப்படியான செயல்களை அனைத்து தமிழ் உறவுகளும் நான்பெரிது, நீ பெரிது என்று பாராமல், பல்கலைக்கழக சமூகத்தினூடாகவும், வர்த்தக சமூகத்தினூடாகவும், தமிழ் கலை கலாசாரச் சங்கங்களூடாடாகவும், புலம்பெயர் சமூகத்தினூடாகவும், மனித உரிமை, மனிதஉரிமைக் கண்காணிப்பகத்தினூடாகவும், சாத்வீகப் போராட்டத்தினூடாகவும் கண்டித்து நிறுத்திவைக்க வேண்டுமென்றும், தமிழ் அரசியல் கட்சிகளின் உன்னத பலத்தோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து உங்கள் உறவுகளாகிய எங்கள் விடுதலை கிடைக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்வியலின் வேதனைகளை, பிரிவுகளைப் புரிந்துகொள்ளாமல் சிலர் அரசியல் சுயஇலாபங்களுக்காகவும், தமது இருப்புக்காகவும், கபடநாடக சூத்திரதாரிகளாக மாறி, எங்கள் விடுதலைக்கான போராட்டத்தைக் கேவலப்படுத்த வேண்டாமெனவும் அப்படிச் செய்பவர்கள் தமிழ் மக்களால் தமிழ் மக்களின் மனச்சாட்சிகளில் இருந்து அகற்றப்படுவர் என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகின்றோம்.
இதேநேரத்தில் எமது வழக்குகளில் ஆஜராகும் சட்டவாளர்கள் அனைவரும் எம்மைப் புரிந்துகொள்ளுங்கள். காலங்காலமாகப் பிரிந்துகிடக்கும் எமது குடும்பப் பொருளாதாரம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழுள்ள நிலையில் நீங்களும் அளவுக்கதிகமான பணத்தைக் கேட்பதால் எங்கள் குடும்பங்கள்தான் என்ன செய்யமுடியும்? எனவே அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைக்கான வழியைப் பிறநலத்தோடு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.'
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment