வாக்களிக்க பணம் வாங்கினால் இதுதான் நடக்கும்
தமிழகமெங்கும் பணம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. இரண்டு தொகுதியில் தேர்தலே நிறுத்தி வைக்கப்பட் டிருக்கிறது... தமிழகத்தில் தேர்தல் மிக நியாயமாக நடைபெறுகிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால், எப்படி தேர்தல் நடைபெறுகிறது என்பது ஒவ்வொரு தமிழனின் மனசாட்சிக்கும் தெரியும். தேன் தடவாத வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ‘ஜனநாயகம் கேலி கூத்தாகி இருக்கிறது’ .
ஜனநாயகம் என்னும் உன்னத அமைப்பு
ஜனநாயகத்தில் சில அபத்தங்கள் இருக்கலாம். அதில் சீர் செய்ய வேண்டியது நிறைய இருக்கலாம். ஆனால், அனைவரின் பங்களிப்பையும் கோரும் ஒரு உன்னத அமைப்பு இது. இதை விட சிறந்த அமைப்பு ஒன்று இருப்பதாக தெரியவில்லை. ஆனால், பணம் என்னும் புற்று, இந்த அமைப்பை மெல்ல அரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் அந்த புற்று இந்த அமைப்பை மொத்தமாக கொன்று விடும். அன்று நாம் நமது திசை தெரியாமல் தத்தள்ளிக்க போகிறோம்.
ஆம், இது எதுவும் மிகையல்ல. ஜனநாயகம் என்னும் அமைப்பே பொது சமூகத்தை அரசியலில் ஈடுபட வைப்பது. ஆனால், பணம் கொடுப்பது, வாங்குவது மூலம் அந்த பொது சமூகத்தை அரசியலில் இருந்து தள்ளி வைக்கிறோம். உண்மையில் இந்த தேர்தல் அமைப்பு மூலம் சில மாற்றத்தை கொண்டு வரலாம் என்று நினைக்கும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கிறோம்.
இந்த அவநம்பிக்கைகள் பெரிதாகிக் கொண்டே போகும் பட்சத்தில் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசித்து பாருங்கள்...? நிச்சயம் அவர்கள் இந்த ஜனநாயக முறையை வெறுப்பார்கள்... சர்வாதிகாரம்தான் தீர்வென்று நம்புவார்கள். அதற்கான வழிகளை அவர்கள் ஆராய்வார்கள். ஆனால், சர்வாதிகாரத்தை அடைவதற்கான எந்த வழிகளும் சாத்வீகமானது இல்லை.
அப்படியானால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும்....? நிச்சயம் கலகம்தான் பிறக்கும். ஆயுதம்தான் தீர்வென்றும் நம்பத் துவங்குவார்கள். அரசு அதை ஒடுக்க அனைத்து வழிமுறைகளையும் கையாளும். அதில், நாம்தான் சிக்கி சீரழிவோம்... நாம் இதைதான் விரும்புகிறோமா...? நமக்கு அமைதியான வாழ்வின் மீது விருப்பமில்லையா...?
விகடன்
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment