உங்கள் அழகை காட்டும் கண்ணாடிகளை சுத்தப்படுத்த
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் நிறைவேறி, கனவு இல்லம் கைகூடும் போது புதிய வீட்டை எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
வீட்டின் உள் அலங்காரத்தில் கண்ணாடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அலமாரிகளின் கதவுகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், ஜன்னல்கள் என பல்வேறு இடங்களிலும் கண்ணாடிகளின் பயன்பாடு அதிகம் உள்ளது.
கண்ணாடிகளை சுத்தப்படுத்தி பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை.
வெறும் தண்ணீரை கொண்டு மட்டும் துடைத்தாலும் அதிலிருக்கும் கறைகளை முற்றிலும் போக்குவதற்கு ஒரு சில பிரத்யேக பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக கண்ணாடிகளை சுத்தப்படுத்த மென்மையான பருத்தி துணியை பயன்படுத்துவது நல்லது.
மற்ற வகை துணிகளை பயன்படுத்தினால் கறைகள் போகாது என்பதுடன், அந்த துணிகளின் இழைகள் கண்ணாடிகளில் கோடுகளை போட்டு விடும். இதனால் கண்ணாடிகளின் ஆயுள் குறைந்து விடும்.
ஈரமான துணியை கொண்டு கண்ணாடியை துடைத்தவுடன் சுத்தமான துணியை கொண்டு துடைப்பதற்கு பதிலாக செய்தித்தாள்களை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு, தண்ணீர் கறைகளும் அகலும்.
வெதுவெதுப்பான நீரில், சிறிது வெள்ளை வினிகரை சேர்த்து கலந்து கண்ணாடியின் மீது தெளித்து காகிதத்தை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடிகள் புதியது போன்று மின்னும்.
எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து, கண்ணாடியில் தெளித்து காகிதத்தால் துடைத்தால் கண்ணாடிகள் பளிச்சென்று மின்னுவதோடு நல்ல நறுமணமும் வீசும்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment