செவ்வாயில் கியூரியாஸிட்டி தரையிறங்கி ஓராண்டு
155 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு பள்ளத்தில் கியூரியாசிட்டி இறங்கியது.
இந்த பள்ளத்தை ஒட்டி ஐந்து கிலோமீட்டர் உயரமுடைய ஒரு மலையும் உள்ளது.
இந்த மலையின் அடிவாரத்தில் படுகை போன்ற நில அமைப்பு இருப்பது ஒரு காலத்தில் இங்கே கணிசமான அளவில் நீர் ஓடியதைக் குறிப்புணர்த்துகிறது.
ஒரு காலத்தில் நுண்ணியிர்கள் வாழ்வதற்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் செவ்வாயில் இருந்திருக்குமா என்று கண்டறியலாம் என எதிர்பார்த்து இந்த இடத்தில் கியுரியாஸிட்டி தரையிறக்கப்பட்டது.
வாகனம் தரையிறங்கிய நேரத்தில் கிளம்பிய புழுதியை வைத்தே சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.
அந்தப் புழுதியில் ஒட்டிய கூழாங்கற்களாலான பாறைத் துண்டுகள் இருந்தன.
அந்த கூழாங்கற்கலை பின்னர் நெருக்கமாக ஆராய்ந்தபோது அவை நீரோட்டத்தால் முனைகள் மழுங்கி வழவழப்பாக இருந்தது தெரியவந்தது.
பூமியில் ஆற்றங்கரைகளில் காணப்படுகின்ற கூழாங்கற்கள் போலவே இவையும் இருந்தன.
கியூரியாஸிட்டி செவ்வாயின் மேற்பரப்பில் உலவிய இந்த ஓராண்டுகாலத்தில் மேலும் பல விஷயங்கள் நமக்குத் தெரியவந்துள்ளன.
ஒரு காலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் மட்டும் நீர் ஓடியிருக்கவில்லை நிலத்தடி நீர் ஓட்டமும் இருந்துள்ளது என கியூரியாசிட்டி சேகரித்த பாறைகள் காட்டுகின்றன.
நீர் ஓடியது என்றாலே உயிர்கள் இருந்தன என்று கூறுவதாக அர்த்தம் இல்லை. உயிர்கள் இருந்தன என்பதை உறுதிசெய்ய வேண்டுமானால், அமினோ ஆசிட்கள் போன்ற உயிரணுக் கட்டமைப்புகளில் சுவடு அங்கே கண்டறியப்பட வேண்டும். ஆனால் அப்படியான எதனையும் கியூரியாஸிட்டி இதுவரை கண்டறியவில்லை.
இந்த வாகனம் மெதுவாக மலையில் ஏறி மேலதிக ஆராய்ச்சிகளை செய்யும்போது பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment