வியாதிகளை நீக்கும் வெற்றிலை
இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
வயிற்றுவலி: இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.
தலைவலி: வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
தேள் விஷம்: இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி: சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சர்: அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment