நான் உன்னை காதலிக்கிறேன்
இவையே பெரும்பாலான காதல் செய்யும் பெண்களின் பிரச்சனை. பொதுவாக ஆண்களுக்கு அடிக்கடி, மூன்று வார்த்தையை சொல்லப் பிடிக்காது. அவ்வாறு அடிக்கடி சொல்லாவிட்டால், உடனே அவர்களுக்கு பாசம் இல்லை, தமக்கு சரியானவர் இல்லை என்று தவறாக நினைக்கக் கூடாது. ஆகவே அந்த மாதிரி அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’என்று சொல்லாமல் இருப்பதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளன.
ஆண்களுக்கு பெண்களைப் போன்று எதையும் சரியாக வெளிப்படுத்த தெரியாது. உண்மையில் சில ஆண்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் பெண்கள் கேட்காமலேயே நிறைய வெளிப்படுத்துவதால், அவர்கள் ஆண்களிடம் நிறைய எதிர்பார்ப்பதோடு, அவை நடக்கவில்லை என்றதும், உடனே கோபப்பட்டு சண்டைப் போடுகிறார்கள்.
* ஆண்களைப் பொறுத்த வரை, அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொன்னால் மட்டும் தான், காதல் உள்ளதாக அர்த்தமா என்று எண்ணுவார்கள். ஆண்களைப் பொறுத்த வரை, ஒரு முறை அந்த மூன்று வார்த்தையை சொன்னாலும், இதயத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே தான் அவர்கள் அடிக்கடி சொல்வதில்லை.
* அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்வது எரிச்சலை உண்டாக்கும். உதாரணமாக, ஆண்கள் குடும்பத்தை நல்லப்படியாக பார்த்துக் கொள்ளவும், எதிர்காலம் நன்கு சந்தோஷமாக அமையவும் வேலைக்கு செல்கிறார்கள். அவ்வாறு வேலை செய்யும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வேலைப் பளுவினால், டென்சனாக இருக்கும் போது, எப்படி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லத் தோன்றும். அவ்வாறு சொன்னாலும், அது வெறும் வார்த்தையாகத் தான் இருக்கும். எனவே இதனைப் புரிந்து கொண்டு, பெண்கள் நடப்பது, உறவை மேலும் வலுப்படுத்தும்.
* ஒருவேளை உங்கள் துணை அடிக்கடி, இந்த மூன்று வார்த்தையை சொல்லாவிட்டால், அவர்களுக்கு உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை என்று அர்த்தம். மேலும் அவர்கள் காதலை சொன்னால், “அத்திப் பூத்தாற் போல்” எப்போதாவது ஒரு முறை மட்டும் தான், மனிதல் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளும் சரியாக வெளிப்படும் படி சொல்வார்கள்.
* சில ஆண்களுக்கு ஈகோ அதிகம் இருக்கும். அதிலும் அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ சொன்னால், எங்கு பெண்கள் தம்மை இழிவாக நினைப்பார்களோ என்று நினைத்து, தன்னை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு, சொல்லாமல் மறுப்பார்கள். அத்தகைய ஈகோவானது, அவர்களது நடவடிக்கைகளிலேயே நன்கு தெரியும்.
பெரும்பாலான காதல், இந்த ஒரு காரணத்திற்கு தான் பிரிகிறது. எனவே காதலில் ஈகோ இல்லாமல் இருந்தால், காதலானது நீண்ட நாட்கள் நிலைக்கும். இவையே ஆண்கள் அடிக்கடி ‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லாமல் இருப்பதற்கான காரணம்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment