முயற்சிக்கான முறைகளும் வெற்றிக்கான இரகசியமும்
இலட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். இது தான் வாழ்கையில் அடைந்த வெற்றிக்கான இரகசியம்” இவ்வளவு தானா? இந்த எளிமையான வார்த்தைகளை ஏற்கனவே புத்தகங்களில் பலமுறை படித்த விஷயம் தான், புதிதாக ஒன்றுமில்லையே என நினைக்காதீர்கள். தொடர்ந்து பொறுமையாக படியுங்கள் வெற்றி உங்களுக்கே...!
ஒரு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தீர்கள் எனில் மீண்டும் என்ன செய்தீர்கள்? ” “மீண்டும் அதே முயற்சியை தொடர்ந்தேன். மீண்டும் தோல்வி தான் கிடைத்தது”. “இங்கு தான் அனைவரும் தவறு செய்கின்றனர். நீங்கள் ஒரு முறை அல்லது இரு முறை முயன்று தோல்வி அடைந்தீர்களென்றால் நீங்கள் செய்யும் முயற்சி முறை அல்லது நீங்கள் செல்லும் பாதையில் தவறு இருக்கின்றது. நீங்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும் போது தோல்வி அடைந்த முறையையோ அல்லது முன்பு சென்ற பாதையிலேயே முயற்சி செய்துகொண்டே இருந்தால் நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்க்கை முடியும் வரை தோல்வியைத்தான் தழுவுவீர்கள் .
வெற்றி கிடைப்பது அரிது தான்.” உதாரணமாக தோமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிக்க ஒரே இழையை வைத்து ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டே வந்திருந்தால் நிச்சயம் நமக்கு மின்சார விளக்கு கிடைத்திருக்காது. அவர் கிட்டத்தட்ட 1000 வகையான இழைகளைக் கொண்டு தொடர்ந்து புது புது முறையில் முயற்சி செய்ததினால் தான் இந்த மகத்தான வெற்றி அவருக்கு கிடைத்திருக்கின்றது.
இந்திய சுதந்திரம் பலவழிகளில் முயன்று அதாவது உண்ணாவிரதம், ஒத்துழையாமை, பல போராட்டங்கள், சத்யாகிரகம், சுதேசி இயக்கம் போன்றவையெல்லாம் கையாண்டு கடைசியில் ‘அஹிம்சை’ வழியில் தான் நாம் சுதந்திரம் அடைந்துள்ளது. அதாவது நீங்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போது நீங்கள் செய்த முயற்சியில் ஏதேனும் தவறுதல் இருக்கின்றனவா? என்று ஆராய வேண்டும்.
அப்படி எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால் வேறு என்ன வழி ? என்று சிந்திக்க வேண்டும். பிறகு அந்த வழியை எவ்வாறு தேர்வு செய்வது ? எப்படி திட்டமிடுவது ? யாரைக்கொண்டு அடைவது? என்பதை தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதி அதை பலமுறை படிக்கவேடும் . அப்படி படிக்கும் போதே நீங்கள் செய்த தவறுகளும், அதை எப்படி திருத்தி செய்யவேண்டிய முறையினையும் உங்களுக்கு தெளிவாக தெரியும்.
மீண்டும் முயற்சி! மீண்டும் ஒருவேளை தோல்வி அடைந்தால் மீண்டும் நீங்கள் செய்த முறை அல்லது பாதையினை சற்று மாற்றி அமைத்து இடைவிடாது முயற்சி செய்யும்போது உங்கள் தோல்வி இருள் மறைந்து வெற்றி ஒளி படர ஆரம்பிக்கும். இந்த முயற்சியின் தோல்வி தான் பல துறைகளில் வெற்றி பெற உதவிடும் படிக்கட்டு. மேலும் விளையாட்டில், அரசியலில், கல்வியில், தொழிலில், ஆன்மீகத்தில், அன்றாட வேலைகளில் பலர் இந்த வகையில் தான் முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்”. நீங்களும் முயற்சியின் பல முறைகளை பின்பற்றி வெற்றி பல அடையுங்கள்.
You may also Like
2 கருத்துரைகள்:
- திண்டுக்கல் தனபாலன் said...
-
நல்லதொரு தன்னம்பிக்கை பகிர்வு... நன்றி...
-
22:21:00
- chenlina said...
-
kate spade
coach outlet online
adidas nmd
reebok shoes
mlb jerseys
nike huarache
nike air max uk
longchamp pas cher
michael kors handbags
louis vuitton
chenlina20170222 -
12:38:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment