வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு கைதி மரணம்
இலங்கையின் றாகம வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியாகிய மரியாம்பிள்ளை டில்ருக்ஷன் நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அவரது தந்தையார் தெரிவித்துள்ளார்.வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டில்ருக்ஷன், அந்த சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் நடத்திய ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததையடுத்து, சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 3 சிறைக்காவலர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தாக்குதல்களுக்கு உள்ளாகிய நிலையில் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
பின்னர் கோமா நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரது மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் மகனின் சடலத்தை தமது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஸையூருக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரது தந்தையார் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலை சம்பவத்தையடுத்து, 30 தமிழ்க் கைதிகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி அவர்களில் சிலர் கை கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் என்ற கைதி கடந்த மாதம் 4 ஆம் திகதி றாகம வைத்தியசாலையில் மரணமடைந்திருந்தார்.
இவரது உடலை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதற்கு பொலிசார் மறுப்பு தெரிவித்திருந்ததையடுத்து, உச்ச நீதிமமன்றத்தின் அனுமதி பெற்று அவரது பெற்றோர் தமது வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிக்கிரியைகளை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்துள்ள நிமலரூபன் மற்றும் டில்ருக்ஷன் ஆகியோருடன் றாகம வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேறு சில தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக, அண்மையில் அங்கு விஜயம் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment