பலவீனமான இதயமுள்ளவர்களுக்கு யமனாகும் மாசுக்காற்று
இதன் காரணமாக பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு அளவை விட ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல நகரங்களின் காற்று மண்டலத்தில் மாசு அதிகமாக இருப்பதாக லான்செட் நடத்திய இந்த ஆய்வுக்கு பொருளுதவி செய்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
வாகனங்கள் வெளியிடும் புகையால் மாரடைப்பு ஏற்படுவதாக முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வு, காற்று மாசடைவதற்கும் இதயம் செயலிழப்பதற்குமான தொடர்பை கண்டறிந்துள்ளது.
பொதுவாக மாரடைப்பு வந்த பிறகு இதயம் பலவீனமடைந்துவிடுகிறது. இந்த உடல்நிலையில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஏழரை லட்சம் பேர் உள்ளனர்.
லான்செட் நடத்திய ஆய்வுக்காக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் பல்லாயிரக் கணக்கானோரிடம் நடத்தப்பட்ட 35 ஆய்வுகளின் முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
மரணங்கள்
கார்பன் மோனாக்சைட், நைட்ரஜன் டை ஆக்சைட் போன்ற வாயுக்களும், பேருந்துகள், லாரிகள் போன்றவை வெளியிடும் புகையில் உள்ள மிகச் சிறு துகள்களும் நுரையீரல்களுக்கு அடியே ஆழமாக போய் விடுவதுடன், இரத்த நாளங்களில் அவை கலந்தும் விடுகின்றன.
இதன் காரணமாக பலவீனமான இதயத்தை உடையவர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளுக்கு அருகே வாழ்ந்தாலோ அல்லது சாலைகளில் அடிக்கடி பயணித்தாலோ அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
காற்று மாசடைவதை தடுக்கும் பொறிமுறைகளை உபயோகப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவில் மட்டும் எட்டாயிரம் இதயங்கள் செயலிழப்பதை ஆண்டுதோறும் தடுக்கலாம் என்று இந்த ஆய்வுக்கு தலைமை தங்கிய டாக்டர் அனூப் ஷா கூறியுள்ளார்.
காற்று மாசடைவதன் காரணமாக ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் உலகில் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
.jpg)











.png)
+-+Copy.png)


Post a Comment