Home
» கட்டுரைகள்
» குறும்படத்துறையில் 8 விருதுகளை பெற்ற மட்டுநகர் பத்மநாதன் கோவர்த்தனனின் "CHECK MATE" குறும்பட வெளியீடு
குறும்படத்துறையில் 8 விருதுகளை பெற்ற மட்டுநகர் பத்மநாதன் கோவர்த்தனனின் "CHECK MATE" குறும்பட வெளியீடு
அத்தோடு தென் இந்திய திரை இயக்குனர் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா அவர்களின் பயிற்சி பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியும் ஒரு வருட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர் பத்மநாதன் (மட்டக்களப்பு தயா மோட்டோர்ஸ் நிறுவன பங்காளர்) மற்றும் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் ஆவார்.இவர் குறும்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது "CHECK MATE" எனும் குறும்படத்தை எழுதி இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்துள்ளார்.
இந்தியாவிலும் இலங்கையிலும் சேர்த்து மொத்தமாக 8 விருதுகளை பெற்ற "நானும் ஒரு தாய்" எனும் குறும்படத்தை தொடர்ந்து இவர் எழுதி இயக்கிய இரண்டாவது குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இக் குறும்படத்தில் "எங்கேயும் எப்போதும்" திரைப்படத்தில், கதாநாயகி அனன்யாவின் அக்காவாக ஏற்று நடித்து பெயர் வாங்கிய நடிகை வினோதினி வைத்யநாதன் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் இவர் "கடல்" மற்றும் "யமுனா" போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருக்கு துணையாக "மாற்றான்" "மௌன குரு" "எதிர்நீச்சல்" "சிங்கம்-2" போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் அருள் ஜோதி பிரதான வேடத்திலும்,
"ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தில் கதாநாயகி வேடம் ஏற்ற ஆர்யா ஹரிதாஸ்,ராஜன் மாயருள்,கீதா குணாளன் மற்றும் இக் குறும்படத்தின் இயக்குனர் கோவர்தன் சிறிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
மட்டக்களப்பை சேர்ந்த "மண்" திரைப்படத்தில் நடித்த கதாநாயகனும் இலங்கையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற ஜனகன் சுதாகரன் லண்டன் இல் இருந்து இக் குறும்படதிற்கான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இக் குறும்படத்துக்கான ஒளிப்பதிவை "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தை இயக்கி விருது பெற்ற சிவராஜ் பரமேஸ்வரனும், இசையை "நானும் ஒரு தாய்" மற்றும் "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படங்களுக்கு இசை அமைத்த Caine W Sidharth உம், படத்தொகுப்பை (editing) "யோவான்" குறும்படத்துக்காக சிறந்த படதொகுப்பாளர் (editor) விருதை பெற்ற Sreyes உம்,இணை இயக்குனராக "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தில் பணியாற்றிய அபிநயா குணாளனும், உதவி இயக்குனர்களாக vivian Trishan (பாஸ் மார்க் 35/100 குறும்படத்தை இயக்கிய மட்டக்களப்பை சேர்ந்தவர்) , M.Manu மற்றும் ஆர்யா ஹரிதாஸும், ஒலிப்பதிவை D.A.வசந்த் (Vibrant Studios) உம் போஸ்டர் டிசைன்சை P.துஷாந்த் உம் மேட்கொண்டுள்ளனர்.
இக் குறும்படத்தின் வெளியீடானது -
* இம் மாதம் (July) 14 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று சென்னை வடபழனி இல் உள்ள AVM PREVIEW திரையரங்கத்தில் பிற்பகல் 4.30 மணிக்கும்
* வருகின்ற ஆவணி (August) மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று மட்டக்களப்பில் உள்ள YMCA மண்டபத்தில் பிற்பகல் 4.30 மணிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஆகவே பார்வையாளர்கள் அனைவரும் தவறாது இக்குறும்பட வெளியீட்டு விழாவிற்கு சென்று குறும்படத்தை பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை "CHECK MATE" குறும்பட குழுவினருடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதி இலவசம் !!!!!!
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
+(1).jpg)











.png)
+-+Copy.png)


Post a Comment