Home
» தமிழ்-பண்பாடு
» ஆயிரம் வருட காலத்தைப் பூர்த்தி செய்தும் உறுதி குன்றாதிருக்கும் தஞ்சைப் பெருங்கோயில்
ஆயிரம் வருட காலத்தைப் பூர்த்தி செய்தும் உறுதி குன்றாதிருக்கும் தஞ்சைப் பெருங்கோயில்
இந்தக் காலத்தை மத்திய சோழர் காலம் என்றழைக்கலாம். இந்தக் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்கள் கட்டப்பட்டன. சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்டியுள்ளான்.
முக்கியமான கட்டடம் 150 அடி நீளமானது. மிகப் பிரமாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிட்டுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜா கோயிலின் உயரம் 160 அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப் பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற் காலத்தில் கட்டப்பட்டவை முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியனவாகும்.
இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவையாகும். இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கி ணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளை உடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக் கிறது. மதிலை ஒட்டி உள்பக்க மாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்கிறது.
இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடை வெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப்பெற்றிருக்கின்றன. இரண்டா வது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது. முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது. ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தின் மீது அமைந்தது.
படுக்கையான பகுதி, நீண்ட துருத்திக் கொண்டிருக்கும் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்து கின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது இதைவிடச் சிறிய பரப்பில் 83 அடி சதுரத்தில் ஒரு உப பீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.
குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் காணப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவற்றின் மீது சிங்கங்களை ஓட்டுபவர், மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும், அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள பிரமாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது. இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுகள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாக கூறப்படுகிறது.
தான் மட்டுமன்றி அரச குடும்பத்தினரும் அரச அலுவலரும் படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும் இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப் பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடன மாதர்களும் மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர சண்டிகேஸ்வரா, அம்மன், சுப்பிரமணியா, கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும் இவ்வளாகத்துள் அமைந்துள்ளன. இக்கோயிலின் கட்டடக் கலை சோழர்காலத்து கட்டடக் கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment