இள நரை வரக் காரணம் என்ன???
வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கிறது.
ஆனால் உண்மையில் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால் முடியின் நிறம் மாறுபடுகிறது.
மேலும் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இத்தகைய காரணங்கள் தெரியாததால், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆகவே அத்தகைய காரணங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு வெள்ளை முடியை தடுக்கலாம்.
மரபணு பண்புகள்: பெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு வெள்ளை முடி சிறு வயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால் அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.
வைட்டமின்கள் குறைபாடு: உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும், முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் வெள்ளை முடிகள் வரும்.
அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.
தைராய்டு: வெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல் அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக சுரந்தாலும், வெள்ளை முடிகள் வந்துவிடும்.
மன அழுத்தம்: பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரே முடிகள் அதிக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் வருகின்றன.
இதனை அனைத்து அழகியல் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு ஆரோக்கியமான, மனஅழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால் வெள்ளை முடிகள் வருவதைத் தடுக்கலாம்.
புகை பிடித்தல்: வெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின் மீது மேற்கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இருப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியை விட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே சிகரெட் பிடிக்காமல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப்போடலாம் என்றும் கூறுகின்றனர்.
You may also Like
2 கருத்துரைகள்:
- திண்டுக்கல் தனபாலன் said...
-
விளக்கமான தகவல்கள்... நன்றி...
-
14:44:00
- chenlina said...
-
coach factory outlet
louis vuitton
oakley sunglasses canada
nike roshe
ray ban sunglasses
kate spade outlet
scarpe hogan
hollister clothing
louis vuitton handbags
golden state warriors jerseys
chenlina20170222 -
12:37:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
.jpg)











.png)
+-+Copy.png)


Post a Comment