மன உளைச்சலை காட்டிக் கொடுக்கும் தலைமுடி
முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.
தலை முடிக்கும் உடல் ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி கனடாவின் வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிடியான் கொரியன், ஸ்டான் வான் யுன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது.
இதய பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது. இதய நோய் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் கார்டிசால் என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது.
ஆய்வு விவரங்கள் குறித்து கிடியான் மேலும் கூறுகையில், மன உளைச்சலுக்கு கார்டிசால் ஹார்மோன் சுரப்பு முக்கிய காரணம். மன உளைச்சல் அதிகரித்தால், அட்ரீனல் சுரப்பியில் கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும்.
இன்சுலினின் செயலுக்கு எதிராக செயல்படும் குணம் கொண்டது கார்டிசால். இதன் அளவு அதிகமானால், குளுக்கனோஜெனிசிஸ் வினை காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
தொடர்ந்து கார்டிசால் அதிகம் சுரந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தலைமுடி சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு செ.மீ. நீளம் வளர்கிறது. 1 செ.மீ. நீள தலைமுடியை ஆய்வு செய்து, அதில் கார்டிசால் அளவை கணக்கிட்டால் ஒரு மாத காலத்தில் மன உளைச்சல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
6 மாத காலத்துக்கு மன உளைச்சல் நிலவரத்தை தெரிந்து கொள்ள 6 செ.மீ நீள தலைமுடி போதும். மேலும், கார்டிசால் அளவைக் கொண்டு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
.jpg)











.png)
+-+Copy.png)


Post a Comment