நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை.
ஓர் ஆக்சன் திரைப்படத்தில் வருவதுபோல காரியம் நடந்தேறியுள்ளது.எதிர் காலத்தில் இது ஒரு திரைப்படமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இன்று புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட நபர்களா
க உள்ளார்கள். சாதாரண திருடர்களால் செய்ய முடியாத அபார சாதனை இதுவாகும். பயங்கரமான ஆயுதங்களை பாவித்து இதைச் செய்துள்ளார்கள். இதற்காக விசேட முகமூடிகளையும் அணிந்துள்ளார்கள்.இந்தச் சம்பவம் சுமார் 22 நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. உலங்குவானூர்தி சுவீடிஸ் தலைநகர் ஸ்ரொக்கோமில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணத்தையும் திருடியவர்களையும் கண்டறிய முடியவில்லை. இதன் பின்னர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், ஆனால் இவர்களா சந்தேக நபர்கள் என்பதை போலீஸ் ஊர்ஜிதம் செய்யவில்லை.
இந்தக் கொள்ளையைக் கண்டு பிடிப்பதற்காக பெருந்தொகையான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சகல ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 சந்தேக நபர்களின் பெயர் அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைவரையும் தேடி வலை விரித்துள்ளனர் போலீசார். உலங்குவானூர்தியை செலுத்தியவர் கட்டிடத்திற்கு மிகவும் அருகருகாக அதை அந்தரத்தில் நிறுத்தியுள்ளார். ஒரு சில மீட்டர் இடைவெளியில் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஓர் ஆக்சன் திரைப்படத்தில் வருவதுபோல காரியம் நடந்தேறியுள்ளது. எதிர் காலத்தில் இது ஒரு திரைப்படமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment